Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 பிப்ரவரி, 2020

உங்கள் கை இதில் எந்த வகை?

Image result for உங்கள் கை இதில் எந்த வகை?



கைவிரல் ரேகையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் கைகளின் அமைப்பைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். கைகள் மொத்தம் ஏழு வகையாக அறியப்படுகிறது. அவை:

1. ஆரம்பகாலக் கை (அ) துவக்க கால கைகள்

2. சதுரக் கைகள்

3. தத்துவக் கைகள்

4. துடுப்புக் கைகள்

5. சிற்பக் கைகள்

6. கலப்புக் கைகள்

7. மனோ தத்துவக் கைகள்

மனிதனின் கை அமைப்பு மேற்கண்ட ஏதாவது ஒரு வகையில் மட்டுமே அமைந்து இருக்கும். நாம் பார்க்கக்கூடிய கைகளின் அமைப்பு இதில் எந்த வகையை சேர்ந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கையும் ஒவ்வொரு வகை பலனை தரக்கூடிய விதத்தில் அமைந்து இருக்கும்.

1. ஆரம்ப நிலைக் கைகள் :

இந்த வகை கைகள் சாதாரணமான கை, சாமான்யமான கை, தடித்த கை, அடிப்படைக் கை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்த வகையான கைகள் தடித்தும், பார்வைக்கு குட்டையாகவும் இருக்கும். இந்த கையில் உள்ள உள்ளங்கை மிருதுவாக இருக்காது. ஒரு விரலுக்கும் மற்றொரு விரலுக்கும் இடையில் இடைவெளி இருக்கும். இந்த கையில் உள்ள விரல்கள் எளிதில் வளையாது மரக்கட்டை போல விரைத்து நிற்கும். இதில் ரேகைகள் குறைவாக அழுத்தமாக பதிந்து இருக்கும்.

2. சதுரக் கைகள் :

சதுரக் கைகள், சிறப்புக் கை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கையின் உள்ளங்கை சதுர வடிவில் காணப்படும். விரல்களுக்கிடையே இடைவெளி இருக்காது. உள்ளங்கை மிருதுவாகக் காணப்படும்.

3. தத்துவக் கைகள் :

இந்த வகை கைகள் முடிச்சு கைகள் என்றும், வேதாந்த விசாரம் செய்கின்ற கைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த கையின் அமைப்பு நீள வடிவத்துடன் இருக்கும். விரல் நுனிகள் நீள் வட்டத்தில் காணப்படும்.

கைகளில் சதைப்பற்று இருக்காது. கையின் பின்புறத்தில் எலும்புகளும், நரம்புகளும் புடைத்து நிற்கும். கைவிரல் நகங்கள் நீளமாக இருக்கும். அகலம் குறைந்து காணப்படும். விரல்களை ஒன்று சேர்த்தால் விரல்களுக்கு நடுவே ஓட்டைகள் காணப்படும்.

4. துடுப்புக் கைகள் :

இந்த வகை கைகள் வலிமைக் கைகள் என்றும், நீள சதுரக் கைகள் என்றும் அழைக்கப்படும். இந்த கைகளுடைய விரல்களின் நுனி சிறிது அகலமாகவும், பரந்தும் இருப்பதால் இது நுனி அகலமான கை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கைகள் மிருதுவாகக் காணப்படும். இந்தக் கையின் அகலப் பகுதியை விட நீளப்பகுதியே மிகுந்து காணப்படும்.

5. சிற்பக் கைகள் :

இந்த அமைப்புடைய கைகளின் அடிப்பாகமானது ஆரம்பத்தில் பருத்து மேலே செல்லச்செல்ல குவிந்து காணப்படும். கையின் நான்கு விரல்களும் இதே மாதிரி இருந்தாலும் கட்டை விரல் மட்டும் சற்று குள்ளமாக காணப்படும்.

6. கலப்பு கைகள் :

இந்த கையில் உள்ள ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படும். இப்படி மாறுதலான விரல் அமைப்புகள் கொண்டிருப்பதால் கலப்புக்கை என்று அழைக்கப்படுகிறது.

7. மனோ தத்துவக் கைகள் :

மனோ தத்துவக் கைகள், ஆன்மீகக் கைகள் என்றும், நீள் கூர்மையான கைகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கையின் அமைப்பு பார்க்க மிகவும் அழகாக இருக்கும். கையின் பின்புறத்தில் ரோமம் இருக்காது. விரல்களுக்கு இடையே இடைவெளி இருக்காது. விரல்கள் மிருதுவாக இருக்கும். விரல்கள் எல்லாம் நுனியில் குவிந்து மிகவும் கூர்மையாக காணப்படும். இத்தகைய அமைப்பு ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக காணப்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக