கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 16கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து ஏறத்தாழ 11கி.மீ தொலைவிலும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள இடம்தான் சங்குத்துறை கடற்கரை ஆகும்.
சிறப்புகள் :
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக சங்குத்துறை கடற்கரை திகழ்கிறது.
இந்த கடற்கரை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அழகான நீளமான மணல் பரப்புடன் நம் கண்களுக்கு காட்சியளிக்கும்.
இங்கு குழந்தைகள் உற்சாகமாக விளையாடுவதற்கு பூங்கா, பார்வையாளர் குடில்கள், போன்றவை அழகுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.
சங்குத்துறை கடற்கரை எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளோடும், ரம்மியமான தோற்றத்தில் அமைந்திருப்பதால் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது.
நம் மனதை வசீகரிக்கும் இடங்களாக சங்கின் தோற்றத்தில் அமைந்துள்ள செயற்கை சங்குகள், நிழற்குடைகள், கடல் தாவரங்கள், விளையாடி மகிழ்வதற்கு மணல் நண்டுகள், ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் கடல் அலைகளின் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
குடும்பத்துடன் பொழுதுப்போக்கை கழிப்பதற்கு இந்த கடற்கரைக்கு செல்லலாம். மேலும் மாலை வேளையில் கடற்கரையில் நீண்ட பயணம் மேற்கொள்ளலாம்.
குழந்தைகளோடு கடல் மணலில் வீடு கட்டியும், அங்கு இங்கும் ஆடி ஓடியும் விளையாடலாம். பாதுகாப்பாக கடலில் அலைகளோடு விளையாடி மகிழ்ந்து ஆனந்தமாக குளித்து மகிழலாம்.
எப்படிச் செல்வது?
கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
மாத்தூர் தொட்டிப் பாலம்.
திற்பரப்பு அருவி.
பத்மநாபபுரம் அரண்மனை.
முட்டம் கடற்கரை.
தெக்குறிச்சி கடற்கரை.
திருவள்ளுவர் சிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக