Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 பிப்ரவரி, 2020

கோவில் திருவிழாவை முன்னிட்டு "பப்ஜி போட்டி" - சிவகங்கையில் புதிய கூத்து

சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் அந்த ஊர் திருவிழாவை முன்னிட்டு பப்ஜி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய இளைஞர்களை செல்போன் கேம்ஸ் அதிகமாக அடிமையாக்கி வைத்துள்ளது. கடந்த தலைமுறையை ப்ளே ஸ்டேஷன்கள் அடிமையாக்கியது போல இந்த தலைமுறையினர் பப்ஜி என்ற விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

ஒரே விளையாட்டை இணையம் மூலம் பல்வேறு இடங்களில் உள்ளவர்கள் இணைந்து விளையாடுவதால் இந்த விளையாட்டு பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது. இன்றை இளைஞர்களில் பப்ஜி விளையாடாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.


இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா நடக்கும். இந்த திருவிழாவின் போது அந்த ஊர் மக்கள் சிலம்பம், ஜல்லிக்கட்டு போன்ற பல பாரம்பரிய வீர விளையாட்டுக்களை விளையாடுவார்கள். இந்நிலையில் இந்தாண்டு நடக்கும் மாசித்திருவிழாவில் பப்ஜி விளையாட்டை அந்த ஊரில் உள்ள ஒரு செல்போன் கடை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒரே நேரத்தில் அவர்கள் சொல்லும் ஐடி வழியாக விளையாட்டில் இணைய வேண்டும். இந்த விளையாட்டில் கடைசி வரை உயிருடன் இருப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த போட்டியில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசு ரூ1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ20 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

நேற்று பிப் 5ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் இந்த போட்டி நடக்கும் என்றும் கல்லல் பகுதியில் உள்ள அன்னை மொபைல் என்ற கடையில்தான் இந்த போட்டி நடக்கவிருக்கிறது என்றும் விளம்பர போஸ்டர் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவில் திருவிழாவில் சிறு சிறு விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்திருப்போம். இப்படியாக தொழினுட்ப வளர்ச்சியில் பப்ஜி விளையாட்டுப் போட்டி அறிவித்திருப்பது பலரை வியப்பிற்குள்ளாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக