Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 பிப்ரவரி, 2020

தரை இறங்கும்போது மூன்று துண்டுகளாக உடைந்த விமானம்: பெரும் பரபரப்பு

தரை இறங்கும்போது மூன்று துண்டுகளாக உடைந்தால் விமானம்



துருக்கி நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்து ஏற்பட்டு அந்த விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 179 பேர் படுகாயமடைந்ததாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று தரை இறங்கியது. அந்த விமானத்தில் 177 பயணிகளும் 6 விமான நிலைய ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் தரையிறங்கியபோது விமான நிலையத்தில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் ஓடுபாதை ஈரப்பதத்துடன் இருந்ததாகவும் அப்போது விமானம் தரையிறங்கியபோது திடீரென வழுக்கிக்கொண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது

இந்த விபத்தில் 3 துண்டுகளாக விமானம் உடைந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை இஸ்தான்புல் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காயமடைந்த 179 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் துருக்கி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக