கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றில் சமையல் அறை குடிநீர் குழாயை திறந்த போது குடிநீரை போன்று மதுபானம் கொட்டிய
சம்பவம் நிகழ்ந்துள்ளது!!
நிலத்திற்க்கு
அடியில் இருந்து மது தண்ணீரைப் போல குழாய்களில் வந்தால் எப்படி இருக்கும் என்று
பலரும் மனதில் நினைத்திருப்பது உண்டு. ஆனால், இதுவரையில் அந்த நினைவு கணவாகவே தான்
உள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சமையல் அறை
குடிநீர் குழாயை திறந்த போது குடிநீரை போன்று மதுபானம் கொட்டிய சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
திரிச்சூர்
மாவட்டம் சாலக்குடி பகுதியில் சாலமோன் அவென்யூ அபாட்மென்ட்டில் 18-க்கும் அதிகமான
குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் இந்த குடியிருப்பில்
உள்ள வீட்டு குழாய்களில் பழுப்பு நிறத்தில், மோசமாக நாற்றத்துடன் தண்ணீர்
வந்துள்ளது. வீட்டு சமையல் அறைகளுக்கு வந்த தண்ணீர் குழாய்களை ஆய்வு செய்ததில்
இதில் பீர், பிராந்தி, ரம் போன்றவை கலந்த மதுபானம் வருவது தெரிய வந்தது. இதனால்
அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து,
சம்பவ இடத்திற்க்கு வந்த உயர் அதிகாரிகள் விசாரணை செய்ததில், கிணற்றுக்கு அருகில்
கொட்டப்பட்ட கள்ளச்சாராயம் ஊற்றுபோல கிணற்றுக்குள் கலந்து, கிணற்று நீரே சாராயமாகி
போனது தெரிய வந்தது. பின்னர், அந்த கிணற்றை நகராட்சி அதிகாரிகள் சுத்தப்படுத்தி
வருகிறார்கள். துணை கமிஷனர் ஷானு கூறும்போது, கிணற்றை 8 முறைக்கு மேல்
சுத்தப்படுத்தி விட்டோம். இனியும் சுத்தப்படுத்தி வருகிறோம் என்றார். இதுபற்றி
அப்பகுதி கவுன்சிலர் ஜோஜி கூறும்போது, கிணற்று நீர் சாராயமானதால் குடியிருப்பு
மக்களுக்கு நகராட்சி மூலம் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
அவர்களுக்கு நிரந்தரமாக நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக