வாகனங்களை
கஸ்டமைஸ் செய்யும் பிரபல நிறுவனம் ஒன்று, மின்சார ஆற்றலில் இயங்கும் சிறியளவிலான ஜீப்
வாகனத்தை தயாரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில்
வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நாட்டிலுள்ள சாலைப் போக்குவரத்து அபாயகரமானவதாக உள்ளது. பெரும்பாலான சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு இடையில் பயணித்து வருகின்றனர்.
இதில் போக்குவரத்து விதிமீறல் ஏற்பட்டால் விபத்துகள் நேரிடுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இதனால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டி பலரும் ஆஃப் ரோடு வாகனங்களுக்கு மாறிவிடுகின்றனர்.
வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை உணர்ந்து கொண்டுள்ள நிறுவனங்களும், வரிசையாக ஆஃப் ரோடு வாகனங்களை களமிறக்கி வருகின்றன. மேலும், இரண்டு வித சாலைகளிலும் பயணிக்கக்கூடிய வாகனங்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதில் பிரபலமாக இருக்கும் நிறுவனம் ஒன்று, மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் வடிவிலான ஒரு வாகனத்தை மிகவும் சிறியளவில் உருவாக்கியுள்ளது.
மின்சார ஆற்றலில் இயங்கும் இந்த வாகனத்தில் தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், சொகுசான இருக்கை வசதி, எல்.இ.டி திறனில் ஒளிரும் முகப்பு விளக்குகள் போன்ற ப்ரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஜீப் வாகனங்களுக்கே உரித்தான பின்பக்கத்தில் ஸ்டெப்னி டயர், அதற்கு உண்டான கதவு உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அச்சு அசல் மஹிந்திராவின் சிறிய ரக ஜீப் வாகனம் போலவே காட்சியளிக்கும் இந்த வாகனத்தை மினி ஜீப் என்றே குறிப்பிடலாம்.
பல்வேறு வசதிகளை பெற்றுள்ள இந்த வாகனத்தில் ஒரே ஒரு பெரிய குறை உள்ளது. அதாவது இந்த ஜீப் பெரியவர்களுக்கானது இல்லை. சிறியவர்கள் அமர்ந்து செல்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இது பொம்மையும் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த வாகனத்திற்கு அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டிருப்பது சரியாக இல்லை. ஜீப் என்று வரும் போது அதனுடைய சக்கரங்கள் அகலமாக இருக்க வேண்டும் என்பது தான் விதி. ஆனால் அதற்கு மாறாக இதில் மெல்லிய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டிருப்பது சரியாகப்படவில்லை. எனினும், இது பெரிய குறையாக தெரியவில்லை என்பது சற்று ஆறுதலாகவுள்ளது.
மினி ஜீப்பில் ரிவெர்ஸ் கியர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் வாகனத்தை முன்னாலும் பின்னாலும் மட்டுமே இயக்க முடியும். சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாகனம் என்பதால், இந்த ஜீப் 30 கிமீ-க்கும் குறைவான வேகத்தில் மட்டுமே இயங்கும்.
இந்த ஜீப்பிற்கான எஞ்சின் மற்றும்
பேட்டரி ஆகியவை, வாகனத்தின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடைய பேட்டரிகளை
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கி.மீ வரை பயணிக்கலாம். மொத்தமாக நான்கு
பேட்டரிகள் இந்த மினி மின்சார ஜீப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
சிறிய அளவில் இருந்தாலும், மிகவும் ஸ்டைலாக காட்சி தருகிறது இந்த மினி ஜீப். இந்த வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்லும் போது எல்லோரும் கண்களும் வாகனத்தின் மீதே இருக்கும். உடன் வரும் வாகன ஓட்டிகள் வியந்து பார்க்கவும் வாய்ப்புள்ளது.
மிகவும் அசாத்தியமான சிறப்பம்சங்களுடன் பக்கவான ஜீப் மாடலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக பலரும் இந்த மினி எஸ்யூவி-யை போட்டிப் போட்டு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய அளவில் இருந்தாலும், மிகவும் ஸ்டைலாக காட்சி தருகிறது இந்த மினி ஜீப். இந்த வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்லும் போது எல்லோரும் கண்களும் வாகனத்தின் மீதே இருக்கும். உடன் வரும் வாகன ஓட்டிகள் வியந்து பார்க்கவும் வாய்ப்புள்ளது.
மிகவும் அசாத்தியமான சிறப்பம்சங்களுடன் பக்கவான ஜீப் மாடலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிச்சயமாக பலரும் இந்த மினி எஸ்யூவி-யை போட்டிப் போட்டு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக