ராயல் என்ஃபீல்டு பிஎஸ்6 புல்லட் 350 மாடலுக்கு முன்பதிவு துவக்கம்
ராயல்
என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள புல்லட்
350 மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. முன்னதாக இந்த வாகனத்திற்காக புக்கிங்
பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளதாக டீலர்ஷிப் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வரும் பைக்குகளில் அனைவரலாலும் வாங்கக்கூடிய மாடலாக திகழ்கிறது புல்லட் 350. வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் ரூ. 1.14 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை பெறுகிறது.
தற்போது இந்த பைக் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை தோற்றத்தில் இருந்தாலும், இதனுடைய கட்டமைப்பு புதிய விதிகளுக்கு இணங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வண்ணத் தேர்வுகளை தவிர்த்து 2020 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலில் குறிப்பிட்ட சில பாகங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிஎஸ்-4 வெர்ஷனில் இருக்கும் அதே 346 சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் தான் இந்த மாடலிலும் உள்ளது. ஆனால் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கள் ஃப்யூவெல் இஞ்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் 19.8 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இதில் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதே கியர்பாக்ஸ் தான் பிஎஸ்-4 மாடலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பக்க டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் டூயல் ஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன. முன்பக்க சக்கரத்ஹ்தில் டூ-பிஸ்டன் பிரேக் கேளிபருடன் கூடிய 280 மிமீ டிஸ்க் உள்ளது. பின்பக்க சக்கரத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய வெர்ஷனில் இருப்பது போன்று, இந்த மாடலிலும் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் 350 பைக்கிற்கான வாடிக்கையாளர்களை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, அதற்குரிய புதிய என்ட்ரி-லெவல் வேரியன்டுகளை கடந்தாண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த மாடல்களுக்கு நல்ல வரவேற்பு தொடர்ந்து வருகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பிஎஸ்-6 புல்லட் 350 மாடலுக்கு தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் இருந்து ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலை அதிகரித்து நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த விலை உயர்வு புல்லட் 350-க்கான சந்தை மதிப்பை பாதிக்காது என்றே கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக