இந்தியாவின் மிகப்பெரிய நான்காவது
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ரியல்மி, தனது அடுத்த காலடியை இந்தியாவில் பதிக்க
உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை ஸ்மார்ட்போன் உலகில் கொடிகட்டி
பறந்த ரியல்மி, தற்போது தொலைகாட்சி உற்பத்தியிலும் குதிக்கப்போவதாக
தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும்
ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட புதிய வகைகளையும் விரிவுபடுத்தும் மூலோபாயத்தின் ஒரு
பகுதியாக, ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ரியல்மி டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக
அதன இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் கூறியுள்ளார்.
பெரிய யுத்தத்தினை கொண்டு வரலாம்
ஜியோமியைப் போல ரியல்மியும் ஒரு நல்ல
குறைந்த விலையில் நல்ல சந்தை வாய்ப்பினை கொண்டுள்ள நிலையில், இந்த அறிமுகமானது
தொலைக்காட்சி பிரிவில் பெரிய யுத்தத்தை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு
வயாதான சீனாவின் ஸ்டார்டப் நிறுவனமான ரியல்மி ஸ்மார்ட் விலையிலேயே ஒரு யுத்ததினை
ஏற்படுத்தியது எனலாம். இது போட்டி நிறுவனங்களான சோனி சாம்சங் உள்ளிட்ட
நிறுவனங்களுக்கு சற்று பிரச்சனையை கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை இலக்கு
இந்தியாவில் ஸ்மார்ட் தொலைகாட்சி
வளர்ந்து வருகிறது. ஆக சரியான விலையில் நாங்கள் இந்தியா மக்களுக்கு ஸ்மார்ட் டிவி
அனுபவத்தை வழங்கும் ஒரு குறிப்பிடத்தக்க வீரராக மாறுவோம் என்றும் ஷெத்
கூறியுள்ளார். இவ்வாறு புதிய வகை பொருட்களை அதிகப்படுத்துவதன் மூலம், ரியல்மி 2020
ஆண்டில் 3,000 கோடி ரூபாய் விற்பனை இலக்கினை கொண்டுள்ளது என்றும் ஷெத் கூறியுள்ளார்.
வருவாயை இரட்டிப்பாக்க இலக்கு
அதே நேரம் இந்த நிறுவனம் வருவாயை
இரட்டிப்பாக்கவும் முயன்று வருகின்றது. 2019ம் காலாண்டர் வருடத்தில் 14,700 கோடி
ரூபாய் மதிப்பில் மொத்தம் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக 15 மில்லியன்
ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இதுவே 2020ல் 30 மில்லியன் ஸ்மார்ட்போன்களை
விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாகவும் ரியல்மி தெரிவித்துள்ளது.
சிறந்த போட்டியாளர்
மேலும் சீனாவின் கொடிய தாக்கத்தால்
பெரிய அளவிலான தாக்கத்தினை எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் தான்
புதிய கூறுகள் விநியோகம் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஷெத் கூறியுள்ளார். ரியல்மி
மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஸ்மார்ட்போன் விற்பனையில் உள்ளதாகவும், மேலும்
ஆன்லைன் சந்தையில் மிக வேகமாக வளர்ந்து ஜியோமிக்கு அடுத்தாற்போல இரண்டாவது அதிகமாக
விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனாகவும் உள்ளது என்றும் ஷெத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக