ஹீரோ
காந்திக்கு (ஹிப்ஹாப் தமிழா ஆதி) ஒரு வித்தியாசமான பிரச்சனை. அதாவது பதட்டமானாலும்
சரி, கவலையாக இருந்தாலும் சரி கெக்க பிக்கவென சிரித்துவிடுவார். இதனாலேயே அவர் வாழ்க்கையில்
பிரச்சனையோ பிரச்சனை. ஜாலியான காந்திக்கு அங்கிதா(ஐஸ்வர்யா மேனன்) என்று ஒரு காதலி.
ஆதி படத்தில் எப்பொழுதும் ஒரு நண்பர்கள் கும்பல் இருக்கும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த நண்பர்கள் கும்பலில் ஒருவர் காணாமல் போக அவரை தேடிச் செல்லும் ஆதி டில்லி பாபு(கே.எஸ். ரவிக்குமார்), சக்கரை (ரவி மரியா) இடையே நடக்கும் கேங் சண்டையில் சிக்கிக் கொள்கிறார். ஆதி சிரித்து சிரித்து பிரச்சனையில் சிக்குவது தான் கதையே.
ஆதி தான் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அவரை பார்த்து நமக்கு சிரிப்பு அவ்வளவாக வரவில்லை. கேங் சண்டையும் பெரிதாக ஈர்க்கவில்லை. நட்பு, காதல், குடும்ப சென்டிமென்ட் என்று ஒரு சிறப்பான படத்திற்கான அனைத்தும் இருந்தும் அரைவேக்காடாக உள்ளதால் ருசிக்கவில்லை. காமெடி காட்சிகளில் கூட சிரிப்பு வரவில்லை. ஆதியின் பிரச்சனையை பார்த்து பாவப்படத் தோன்றவில்லை.
அப்பா, மகன் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. ஆனால் அது பெரிதாக கை கொடுக்கவில்லை. ஹீரோயின் டம்மி பீஸ். பாடல்கள் இருக்க வேண்டுமே என்று திணிக்கப்பட்டுள்ளது. யோகி பாபு வரும் காட்சிகள் பரவாயில்லை. ஆதியும், நண்பர்களும் அடிக்கும் லூட்டியை பார்க்க நன்றாக உள்ளது. ஆனால் ஆதியிடம் ஏதோ மிஸ்ஸிங்.
எதற்கெடுத்தாலும் பாட்டு பாடுவதை ஆதி கொஞ்சம் நிறுத்தினால் காதுகளுக்கு நன்றாக இருக்கும். ஆக, நான் சிரித்தால், மெதுவா சிரிப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக