Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

டிக்டாக்கில் ஆட்டம்... காதலியுடன் ஓட்டம்... கேள்விக்குறியான இரண்டு மனைவிகளின் வாழ்க்கை...

சேலத்தில் டிக்டாக் காதலியுடன் கணவர் தலைமறைவானதால் அவரை மீட்டு தரக்கோரி இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் டிக்டாக் செயலியை தடை செய்யக்கோரி பாதிக்கப்படும் குடும்பங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்தாலும் அதனை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் நபர்களால் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக திருமனமானவர்களின் அலப்பறைகள் தொடர் கதையாகி வருகின்றன.

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தைச் சேர்ந்தவர் முரளிதரன். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி அந்த பெண்ணுடன் ஏற்பட்ட சச்சரவுகளால் அவரை விவாகரத்து செய்துவிட்டார் முரளிதரன். இருப்பினும் முரளி தரனுக்கு வேறொரு பெண்ணை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தநிலையில் முரளி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

 அதற்கு கிடைத்த சொற்ப லைக்குகளை கண்டு குஷியான முரளி பெண்களின் வீடியோக்களுக்கு டூயட்டும் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து மயங்கிய திருச்சி பெண் ஒருவர் முரளியின் டான்ஸ் வீடியோக்களுக்கு டூயட் செய்துள்ளார். இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து இடைவிடாமல் பேசி வந்துள்ளனர். இருவருக்குள்ளும் இருந்த கெமிஸ்ட்ரி காதலாக மாறியுள்ளது.

முரளியின் நடவடிக்கையை குறித்து அவரது மனைவியும், பெற்றோரும் கண்டித்தபோது நாங்கள் நட்பாகத்தான் பழகி வருகிறோம் என கூறிய முரளி சில நாட்கள் கழித்து காதலியுடன் தலைமறைவாகியுள்ளார். இந்த செய்தி முரளியின் மனைவிக்கு பேரிடியை கொடுத்ததையடுத்து, தனது கணவரை எப்படியாவது மீட்டு தரக்கோரி அவர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முரளியின் செல்போன் எண்ணைக்கொண்டு அவரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக