நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி திடீர் மயக்கம்..
கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில்
மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் தூக்கு
தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா (26) சமீபத்தில்
குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதால்
அதனை எதிர்த்து வினய் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
#UPDATE Justice R
Banumathi was taken into the chamber immediately after she fainted during the
hearing in 2012 Del… https://t.co/V2yP4bjFPa
— ANI (@ANI) 1581671612000
அந்த மனு மீதான விசாரணை இன்று
நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய வினய்
சர்மா '' தான் சிறையில் சித்ரவதை அனுபவிப்பதாகவும், அதனால் தனது மனநிலை சீரான நிலையில்
இல்லை எனவும் கருணை மனுவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் என்னுடைய
மனுவை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார்' என கூறினார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறை நிர்வாகம், வினய் சர்மாவின் உடல்நிலை, மனநிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி அதற்கான மருத்துவ ஆதாரங்களை நீதிபதி முன்பு சமர்ப்பித்தது. இதையடுத்து வினய் குமார் சர்மாவின் மனுவை தகுதி இல்லாததாகக் கருதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த விசாரணையின்போது நீதிபதி பானுமதி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பானுமதி அவருடைய அறைக்குள் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ' நீதிபதி ஆர் பானுமதிக்கு அதிக காய்ச்சல் உள்ளது. அவரை அறையில் உள்ள மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர் என தெரிவித்தார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக