சூரிய மேடு என்பது மோதிர விரலுக்கு கீழே இருக்கும். சூரிய மேடு உச்சமாக அமைந்து இருப்பவர்கள் உயரத்தில் நடுத்தரமாக இருப்பார்கள். கம்பீரமான நடை உடையவர்கள்.
குணநலன்கள் :
சூரிய மேடு மற்ற மேடுகளை விட உயர்ந்து காணப்பட்டால் அவர்கள் தேர்ந்த ஞானிகளாகவும், மேதைகளாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்ற விஞ்ஞானிகளாகவும், பொது அறிவு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு எதிர்பாராத தனம் கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் அணிய விருப்பம் கொண்டவர்கள். மிகவும் கண்டிப்பானவர்கள். இவர்கள் எடுத்த காரியத்தை சோம்பேறித்தனம் காரணமாக பாதியிலேயே விட்டுவிடுவார்கள்.
நடக்கும் காரியங்கள் அனைத்திற்கும் கடவுளே காரணம் என்பதில் நம்பிக்கை உடையவர்கள். ஆனால், முயற்சியை விட அதிர்ஷ்டத்தை முக்கியமாக கருதுவார்கள்.
மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள். பிறரை மதிக்காமல் தங்களையே உயர்வாக எண்ணிக் கொள்வார்கள்.
பிறர்மேல் இரக்கம் கொண்டு வலிய உதவி செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. குறைந்த உழைப்பு, அதிக இலாபம் என்பதே இவர்களின் குறிக்கோள்.
இவர்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள். மற்றவர்களுடன் வெகு எளிதில் பழகக்கூடியவர்கள்.
நீதி, நேர்மை என்பது எல்லாம் இவர்களுக்கு பிடிக்காது. சந்தர்ப்பங்களுக்கு ஏற்றப்படி நடந்து கொள்வார்கள்.
மற்றவர்களை வெகு எளிதில் புரிந்து கொள்வார்கள். பிரபலமாகும் வாய்ப்பும் உண்டு.
சூரிய மேடு கோணல் மாணலாகி இடம் பெயர்ந்திருந்தால் அவர்கள் அசட்டு மூடர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், பாசாங்கு செய்பவராகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக