Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

“அரசு பஸ்ல போறீங்களா..? ஸ்வீட் எடு கொண்டாடு” அசத்தும் புதுக்கோட்டை போக்குவரத்து கழகம்!

Image result for “அரசு பஸ்

"வாங்க கவர்மெண்ட் பஸ்சில் போகலாம்" "வந்தா எல்லாருக்கும் ஸ்வீட்..." என பயணிகளை அழைக்கும் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள்...
அரசு பேருந்தில் பயணிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை போக்குவரத்து துறை அதிகாரிகளும், ஊழியர்களும் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்து, அவர்களூக்கு மிட்டாய் வழங்கினர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த பயணிகள் புதுக்கோட்டையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்து, தனியார் பேருந்துகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சுவீட் எடுங்கணு சொல்லி, அரசு பேருந்தில் கூட்டத்தை கூட்டிய ஊழியர்கள்!

குறிப்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, ராமேஸ்வரம், காரைக்குடி, மதுரை என பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்கிறது. இந்த பகுதியிலிருந்து பயணிக்கும் மக்கள் அதிகளவில் தனியார் பேருந்துகளைதான் பயன்படுத்தி வரும் சூழல் நிலவுகிறது.

புதுக்கோட்டை போக்குவரத்து மண்டல அலுவலர்கள் இந்த நிலையை மாற்ற வேண்டும் என திட்டமிட்டு, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அரசு பேருந்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து, அரசு பேருந்தை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து போக்குவரத்து ஊழியர்களால் விளக்கப்பட்டது.

மேலும், தற்போது அரசு பேருந்தில் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறித்தும், அந்த வகை பேருந்துகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் பயணிகளுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கைகொடுத்து போக்குவரத்து அதிகாரிகள் வரவேற்றனர்
இதனை பேருந்து நிலையத்தில் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக