உள்ளங்கையில் உள்ள ஏழு வகை மேடுகளில் செவ்வாய் மேடும் ஒன்றாகும். இந்த செவ்வாய் மேடு என்பது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. மேல் செவ்வாய் மேடு
2. கீழ் செவ்வாய் மேடு
மேல் செவ்வாய் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழே சந்திர மேட்டுக்கு மேலே உள்ள பகுதியாகும். கீழ் செவ்வாய் மேடு என்பது குரு விரலுக்கு கீழே சுக்கிர மேட்டுக்கு மேலே உள்ள மேடாகும்.
செவ்வாய் மேடு நன்றாக அமையப் பெற்றவர்கள் வட்ட வடிவான முகத்தையும், கரகரப்பான குரலையும் பெற்றிருப்பார்கள்.
குணநலன்கள் :
புகழை விரும்புபவர்கள். மனதில் பட்டதை மறைக்காமல் கூறிவிடுவார்கள். அன்பு, பண்பு, இரக்கத்தை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள். தீமையான வழியில் செல்வார்கள். தைரியமானவர்கள்.
முன்கோபம், முரட்டுத்தனம் உடையவர்கள். சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குபவர்கள்.
நல்லது, கெட்டது தெரியாதவர்கள். இவர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளுக்கு இவர்களே காரணமாக அமைவார்கள்.
உறவினர்கள் இவரை பகைவராக எண்ணுவார்கள். பெரும்பாலும் சீருடை பணியில் இருப்பவர்கள்.
இவர்கள் உயிரைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். சாகசம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள்.
மற்றவர்களின் உபதேசத்தை ஏற்க மாட்டார்கள். பிடிவாத குணம் உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக