Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

Image result for நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
மிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான்.

புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர், எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

கோவில் வரலாறு :

இராமாயண காலத்தில், சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார்.

பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

அப்போது 'இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.

தல பெருமைகள் :

இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.

இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான், இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.

மிக பிரம்மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.

வடைமாலை சாத்துவது ஏன்?

முன்பு ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

கோபுரம் இல்லாதது ஏன்?

லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக