கைரேகை சாஸ்திரத்தில் ஒருவருடைய விரல்களின் அமைப்பில் இருந்து சில முக்கியமான குணங்களை சொல்லிவிட முடியும். விரல்கள் உள்ளங்கை அளவிற்கு ஏற்ற மாதிரி இருப்பதே சிறப்பாகும். உங்களுடைய விரலின் அமைப்பும்... உங்களுடைய குணமும்....!
நீளமான விரல்கள் :
இவர்கள் பொறுமையுள்ளவர்களாகவும், சுத்தத்தை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள். எந்த காரியத்தையும் சற்று மெதுவாகவே செய்வார்கள். யாரையும் சந்தேகிக்கக் கூடியவர்கள். சட்டென்று யாருடனும் பழகி விட மாட்டார்கள். தனிமையை விரும்புபவர்கள். இந்த மாதிரி விரல் அமைப்பு பெற்றவர்களின் கைகள் கட்டையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் இவர்கள் மிகவும் சுயநலக்காரர்களாகவும், மூட நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
வளையும் விரல்கள் :
விரல்கள் வளையக்கூடியதாக இருந்தால் அவர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். கலை, அழகை ரசிப்பவர்கள். கற்றுக் கொள்வதில் ஆர்வமும், பொறுமையும் உள்ளவர்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்.
விறைத்த விரல்கள் :
கட்டை போன்று விரைத்த விரல்களை உடையவர்கள் பிடிவாதமும், அழுத்தமும் உடையவர்கள். கடினமான உழைப்பாளிகள். தங்கள் மனதில் படிந்த எண்ணத்தை இவர்கள் எப்போதும் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். தங்கள் வேலையில் புதிய முறையை இவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். புதிய சிந்தனைகள் இல்லாதவர்கள்.
முடிச்சு விரல்கள் :
நீளமான விரல்கள் முற்றியவையாகவும், நடுப்பகுதியில் முடிச்சுகளுடனும் இருந்தால் இவர்கள் சண்டைக்காரர்களாகவும், பொய் பேசுகிறவர்களாகவும், வேஷம் போடுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
குட்டையான விரல்கள் :
குட்டையான விரல்களை உடையவர்கள் அவசரப்புத்திக்காரர்களாகவும், படபடப்பு மிகுந்தவர்களாகவும், நிதானமில்லாதவர்களாகவும், அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறவர்களாகவும், வேடிக்கையாக பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
விறைத்த குட்டை விரல்கள் :
விரல்கள் கட்டையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் அதிகம் பிடிவாதம் உள்ளவர்களாகவும் அவசரப்பட்டு முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக