இருக்கிறதிலயே கொடுமையான விஷயம் இந்த வயிற்று வலி தான். கையை
வயிற்றில் வைத்து துடிக்கும் அளவிற்கு இதன் வலி நம்மளை பாடாய் படுத்தி விடும்.
வயிற்று வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. வயிறு உப்புசம், உணவு சரியாக
சீரணிக்காத போது, சாப்பிட்ட உணவு நஞ்சாகும் போது, மாதவிடாய் காலத்தில் இப்படி
ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் சிலருக்கு அடிவயிற்றில் வலி
இருக்கும். சிலருக்கு இடது அல்லது வலது என்ற குறிப்பிட்ட அடிவயிற்று பகுதியில்
மட்டும் வலி தென்படும். நாமும் வயிற்றில் விளக்கெண்ணெய் போடுவது, வலி நிவாரணி மருந்துகள்,
எதாவது கூல்டிரிங்ஸ் என்று குடித்து வயிற்று வலியை சரிப்படுத்த முயலுவோம். ஆனால்
மருத்துவர்கள் அப்படி செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். எதுவும்
தெரியாமல் நீங்கள் சிகிச்சை மேற்கொள்வது தவறு அதனால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன
என்றும்கூறுகிறார்கள். குறிப்பாக இடது அடிவயிற்றில் வலி ஏற்பட சில காரணங்கள்
இருக்கின்றன, வாங்க பார்க்கலாம்.
இடப்பக்க வலியை எப்படி அடையாளம்
காண்பது
மில்லியன் கணக்கான மக்கள் இந்த
வயிற்று வலியால் பாதிப்படைந்து வருகின்றனர் என்று இரைப்பை குடல் மருத்துவர்கள்
கூறுகின்றனர். இடது பக்கமாக வருகின்ற வயிற்று வலி மிகவும் கடுமையானதாக இருக்கும்.
இதனை நீங்கள் சி. டி ஸ்கேன், எக்ஸ்ரே மூலம் படம் பிடித்து எந்த இடத்தில் பாதிப்பு
என்பதை அறிந்து கொள்ளலாம். அடிவயிற்று பெருநாடி அனீரிசிம், பெருநாடி கிழிந்த நிலை,
குடல் முறுக்கப்பட்ட நிலை, குடலுக்கு குறைந்த இரத்த ஓட்டம் பாய்தல் போன்ற நிலைகளாக
இருக்கலாம் என்கின்றனர்.
வலி உள்ள இடத்தை கண்டறிதல் மற்றும்
அறிகுறிகள்
இடதுபக்க அடிவயிற்று வலி என்று
நீங்கள் மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் சரியான இடத்தை கண்டறிய முற்படுவார்.
இடது வயிற்றின் மேல் பக்கத்தில் வலித்தால் அது அஜீரணம், வாயு, ரிஃப்ளக்ஸ், இரைப்பை
அழற்சி, புண்கள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சினைகளால் உண்டாகலாம். இதுவே
இடது கீழ் அடிவயிற்றில் இருந்தால், பெருங்குடல் நிலைகள் (டைவர்டிக்யூலிடிஸ்
மற்றும் பெருங்குடல் அழற்சி), பெண்கள் கருப்பை பாதிப்பு களான (கருப்பை
நீர்க்கட்டிகள் அல்லது எண்டோமெட்ரியோசிஸ்) அல்லது டெஸ்டிகுலர் நிலைமைகளாக
இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிறகு மருத்துவர் உங்களுக்கு ஏற்படும்
அறிகுறிகளை சோதித்து பார்ப்பார்கள். காய்ச்சல், இரத்தத்துடன் மலம், தொடர்ந்து
குமட்டல் மற்றும் வாந்தி, எடை இழப்பு அல்லது சிறுநீர் கழிப்பதில் ஏற்படும்
மாற்றங்கள் இவற்றையும் பரிசோதிப்பார்கள். சிலருக்கு தீவிர வலியால் வலி உணர்வின்மை,
எரியும், கூச்ச உணர்வு அல்லது சருமத்தின் அரிப்பு, சரும வடுக்கள் , கொப்புளங்கள்
ஏற்பட வாய்ப்புள்ளது.
டைவர்டிக்யூலிடிஸ் மற்றும் அறிகுறிகள்
இது ஒரு அழற்சி பாதிப்பால் உண்டாகக்
கூடியது. நமது பெருங்குடல் சுவரில் டைவர்டிகுலா என்ற பை இருக்கும். இந்த பைகளில்
வீக்கம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது. இப்படி வீக்கம் ஏற்படுவதால் இடது அடி
வயிற்றில் அடிக்கடி வலி உண்டாக ஆரம்பிக்கும்.
காய்ச்சல், குடல் பழக்க வழக்கங்களில்
மாற்றம், இரத்தத்துடன் மலம் கழித்தல், குளிர், வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற
அறிகுறிகள் தென்படும். நிலைமை ரொம்ப தீவிரமடைந்தால் இரத்தக் கசிவு,
நோய்த்தொற்றுகள், குடலில் அடைப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். இதை கண்டறிய உடல்
பரிசோதனை, ஸ்கேன் மற்றும் லேப் டெஸ்டுகள் செய்யப்படுகின்றன. அலற்சி யை போக்க ஆன்டி
பயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
பெருங்குடல் அழற்சி
இதுவும் டைவர்டிக்யூலிடிஸ் போலவே
இருந்தாலும் இதன் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நமக்கு தெரிய வரும். இந்த
பெருங்குடல் அழற்சி ஏற்பட்டால் வயிற்று போக்கு, இரத்தத்துடன் மலம் வெளியேறுதல்
போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. உணவு நச்சாகுதல், குடலுக்கு இரத்த ஓட்டம் சரியாக
இல்லாமல் இருத்தல், அல்சர், எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்ற காரணங்கள்
பெருங்குடலில் அழற்சியை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த
பெருங்குடல் அழற்சி யும் இடது அடிவயிற்றில் வலி உண்டாக்குகிறது.
இரைப்பை அழற்சி
வயிற்றின் சுவர்களில் அழற்சியை
ஏற்படுத்துகிறது. அதாவது சுவர்களில் வீக்கம் ஏற்பட ஆரம்பிக்கும். எதாவது
மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவது, ஆல்கஹால் பழக்கம், வலி நிவாரணி மருந்துகளை
அடிக்கடி எடுப்பது இரைப்பை அழற்சிக்கு காரணமாகிறது. இந்த அழற்சியை கண்டுக்காமல்
விட்டால் அது நாள்பட்ட இரைப்பை அழற்சி அல்லது அல்சரை உண்டாக்கும். இந்த இரண்டுமே
இடது அடிவயிற்றில் தீவிர வலியை ஏற்படுத்தும். குறிப்பாக இரவு நேரங்களில் வலி
அதிகமாக இருக்கும். சாப்பிட்ட பிறகு வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். அதே
போல் குமட்டல், வாந்தி போன்றவை நேரலாம். எனவே இதை முன்னரே கண்டறிந்து சிகிச்சை
அழிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடம்பு குளிர்ந்து நடுக்கம் ஏற்படுதல்
அம்மை நோய் அல்லது வெரிசெல்லா-ஜோஸ்டர்
வைரஸ் பாதிப்பு இருந்தால் உங்களுக்கு குளிர் நடுக்கம் உண்டாகும். அம்மை நோய்
பாதிப்பு இருந்தாலும் இடது அடிவயிற்றில் வலி உண்டாகும். மேலும் சருமத்தில்
அரிப்பு, எரிச்சல், உணர்வின்மை, சரும வடுக்கள் போன்றவைகள் தென்பட ஆரம்பிக்கும். எனவே
மருத்துவர்கள் இதன் அறிகுறிகளை வைத்து அம்மைநோயா அல்லது குடல் அழற்சியா என்பதை
கண்டறிகிறார்கள்.
பருவ கால மாற்றத்தால் வருகின்ற குளிர்
நடுக்கம் என்று விட்டு விடாதீர்கள். இந்த மாதிரியான குளிர் நடுக்கம் உண்டாகிற
பொழுது, இடது பக்க அடி வயிற்றில் சில அதிர்வுகள் உண்டாவதை உங்களால் உணர முடியும்.
அடிவயிற்று பெருநாடி அனீரிசம்
இது ஒரு பயங்கரமான பாதிப்பு என்று
மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் நமது உடலுக்கு இரத்தத்தை வழங்கும் பெரிய
இரத்த நாளம் தான் பெருநாடி. இந்த பெருநாடியின் சுவரில் வீக்கம் ஏற்படுவது பல்வேறு
பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த வீக்கம் மெதுவாக வளர்ந்து ஒரு
நிலையில் வெடித்து விடுமாம். இதனால் நம் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம் என்று
எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த பெருநாடி அனீரிசம் பிரச்சனை இருந்தால்,
தொப்புளுக்கு அருகில் ஒரு சிறு துடிப்பு மற்றும் இடது பக்க அடிவயிற்றில் வலியை
காணுவீர்கள். அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 200, 000 மக்கள்
பெருநாடி பிரச்சினையால் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே உங்களுக்கு பெருநாடி
அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.
அஜீரணக் கோளாறுகள் மற்றும் கருப்பை
நீர்க்கட்டிகள்
சாப்பிட்ட பிறகு அசெளகரியம், வயிறு
எரியும் உணர்வு, வயிறு வீக்கம் இவற்றை உணர்ந்தால் அது அஜீரணக் கோளாறாக இருக்கும்.
உங்கள் உணவுப் பழக்கம், மன அழுத்தம், எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள், கர்ப்பம்
போன்றவை அஜீரணக் கோளாறை உண்டு பண்ணுகிறது. இதை சரி செய்ய ஆரோக்கியமான உணவுப் பழக்க
வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு கருப்பை அடிவயிற்றின் கீழ் பகுதியில்
தான் அமைந்துள்ளது. இந்த கருப்பையில் சில சமயங்களில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
இதனாலும் பெண்களுக்கு இடது அடிவயிற்று பகுதியில் வலி உண்டாகும். இதைத் தவிர
காய்ச்சல், தலைசுற்றல் மற்றும் வேகமாக மூச்சு விடுதல் போன்ற பிரச்சினைகள்
இருந்தால் நீர்க்கட்டிகளின் சிதைவு மற்றும் கருப்பை முறிவை காட்டுகிறது. எனவே
இதற்கு உடனடியாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்வது நல்லது.
சிறுநீரக கற்கள்
சிறுநீரகத்தில் படிந்துள்ள தாதுக்கள்
கற்களை உருவாக்குகின்றன. இந்த கற்கள் சிறுநீர் பாதை வழியாக வெளியேற நினைக்கும்
போது சிக்கிக் கொண்டு அடிவயிற்றில் வலி, சிறுநீர் வரப்பு தடைபடுதல் போன்ற
பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுதல், சிறுநீர் நிற
மாற்றம், வாந்தி போன்றவைகள் தென்படும். ஒவ்வொரு ஆண்டும் அரை மில்லியனுக்கும்
அதிகமான மக்கள் சிறுநீரக கல் பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன. போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உடல் எடை,
உடற்பயிற்சியின்மை, உப்பு மற்றும் சர்க்கரை உணவை அதிகம் எடுப்பதால் உண்டாகிறது.
எனவே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இழுக்கப்பட்ட வயிற்று தசைகள், இடுப்பு
அழற்சி நோய்
அதிகமான உடற்பயிற்சி செய்வது, உடம்பு
நீட்சிகள் போன்றவை வயிற்று தசைகளை அதிகமாக இழுக்கும். இது கடுமையான வலி,
சிராய்ப்பு, வீக்கம் அல்லது பிடிப்புகளை வயிற்றில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே
ஓய்வெடுத்து உடற்பயிற்சி செய்யுங்கள். அடிவயிற்று வலி குறைய ஐஸ் ஒத்தடம் தரலாம்.
இடுப்பு அழற்சி நோய் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் நோயாகும். கருப்பை, ஃபலோபியன்
குழாய்கள், கருப்பைகள் மற்றும் கருப்பை வாய் போன்ற இடுப்பு உறுப்புகளில்
ஏற்படுகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இதில் பாதிப்படைகின்றனர். இது ஒரு
பாலியல் ரீதியாக பரவக் கூடிய ஒன்றாகும். இதனால் அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி,
காய்ச்சல், வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும் போது வலி, உடலுறுவின் போது வலி,
கர்ப்பத்தில் சிக்கல் போன்றவற்றை சந்திக்கின்றனர்.
வாயுத் தொல்லை
நமக்கு ஏற்படும் ஏப்பம், எரிச்சல்,
வீக்கம் இவையெல்லாம் வாயுத் தொல்லையால் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 14 - 23 வரை
மக்கள் வாயுத் தொல்லையை சந்திக்கின்றனவாம். சாப்பிடும் போது காற்றை விழுங்குவது,
வேகமாக சாப்பிடுவது, ஜூஸ், தண்ணீரை வேகமாக குடிப்பது, சில வகை உணவுகள் கூட வாயுத்
தொல்லையை ஏற்படுத்தி குடலில் பாக்டீரியா பெருக்கத்தை உண்டாக்குகிறது. எரிச்சலுடன்
மலம் கழிப்பது வாயுத் தொல்லை இருப்பதன் அறிகுறியாகும். உடனே மருத்துவரை அணுகி
சிகிச்சை பெறுவது நல்லது.
குடலிறக்கம் மற்றும் குடல் அடைப்பு
குடலிறக்கம் இருக்கும் நபருக்கு
வயிற்றில் வீக்கம் அல்லது கட்டிகள் இருக்கும். அடிவயிற்று சுவரில் ஏற்படும்
பலவீனம் காரணமாக கொழுப்புத் திசுக்கள் வெளியே வர ஆரம்பிக்கும். இருமல், சிரிப்பு,
உடற்பயிற்சி போன்றவற்றின் போது வலி இன்னும் மோசமாக தென்படும். இதற்கு சில
நேரங்களில் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகிறது. குடலில் ஏற்படும் அடைப்பு முதலில்
நமது செரிமானத்தை பாதிக்கிறது. குடல் அறுவை சிகிச்சை, குடலிறக்கம் மற்றும்
கட்டிகள் ஆகியவை குடல் அடைப்பு ஏற்பட காரணமாகிறது. வலி, வயிற்று வீக்கம் மற்றும்
பசியின்மை போன்றவை தென்படும். மலம் கழித்தல் நின்று விட்டால் உடனே சிகிச்சை
பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக