இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டம் அவினாசி
அருகே நடந்துள்ளது.இரண்டு ஆண்டுக்கு முன் பிரபாகர், துர்கா தேவி என்ற
தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
அவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக்
என்ற மகனுடன் பெரியாயிபாளையத்தில் வசித்து வந்தனர். தம்பதிகள் இருவருக்கும் இடையே
அவ்வபோது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக
கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் தம்பதிக்கிடையே
வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரபாகர் கோபத்தோடு பணிக்கு சென்றுவிட்டதாகவும்
சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாலை ஆகியும் வீடு
பூட்டப்பட்டிய படியும், துர்காதேவி மற்றும் அவருடைய குழந்தையும் நெடு நேரமாக
வெளியே வாராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது தாயும்,சேயும் தூக்கில்
தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் இருவருடைய
உடலைக் கைப்பற்றி கணவன் பிரபாகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக