>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 13 பிப்ரவரி, 2020

    பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ராட்ரிக்ஸ் காலமானார்!


    Fashion Designer Wendell Rodricks Passes Away At His Home In Goa
    ஃபேஷன் துறையில் மிகவும் பிரபலமான ஓர் ஆடை வடிவமைப்பாளர் தான் வெண்டர் ராட்ரிக்ஸ். 59 வயதான வெண்டல் ராட்ரிக்ஸ் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கோவாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவர் பல பிரபலமான நட்சத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார். இவரது திடீர் இழப்பு பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல திரைப் பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    வெண்டல் ராட்ரிக்ஸ் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவஸ்தைப்பட்டு வந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நேற்று மாலை திடீர் மாரடைப்பால், உலகில் இருந்து விடைபெற்றுவிட்டார்.

    வெண்டல் ராட்ரிக்ஸ்

    வெண்டல் ராட்ரிக்ஸ்

    வெண்டல் ராட்ரிக்ஸ் ஆடை வடிவமைப்பாளர் மட்டுமின்றி, எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைக்காக வாதிடுபவர். பத்மஸ்ரீ விருது பெற்ற டிசைனர் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி பிறந்தார். இவர் தனது வாழ்க்கையை ஃபேஷன் துறையில் மட்டுமின்றி, திரைப்படங்களான ஃபேஷன் (2008) மற்றும் பூம் (2003) உள்பட திரைப்படங்களிலும் கேமியோ தோற்றங்களிலும் நடித்துள்ளார்.
    பாரீஸில் ஃபேஷன் படிப்பு
    வெண்டல் பாரீஸில் தனது ஃபேஷன் படிப்பை படிப்பதற்காக பணத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஃபேஷனில் மினிமலிசம் என்ற கருத்தை பிரபலப்படுத்திய முதல் சில இந்திய ஆடை வடிவமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.
    இந்திய வடிவமைப்பாளர்
    உலகின் மிகப்பெரிய ஆடை கண்காட்சிக்கு (IGEDO) அழைக்கப்பட்ட முதல் இந்திய வடிவமைப்பாளர் வெண்டர் ராட்ரிக்ஸ் ஆவார். உலக உடைகளின் வரலாறு மற்றும் ஃபேஷன் தொடர்பான மற்ற பிரச்சனைகள் குறித்தும் இவர் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். மேலும் ராட்ரிக்ஸ் காதி உடைகளில் பல பரிசோதனைகளை செய்துள்ளார்.
    பாரம்பரிய கோன் குன்பி புடவை
    பாரீஸில் ஃபேஷன் மாணவராக இருந்த நாட்களில், உங்கள் நாட்டை உங்கள் உடைகளில் வைக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே இவர் பல முறை அவ்வாறான உடைகளை வடிவமைத்தார். அதில் அவரது படைப்புக்களில் ஒன்று தான் பாரம்பரிய கோன் குன்பி புடவைகளின் மறுமலர்ச்சி.
    ரெசார்ட் உடைகள்
    இந்தியாவில் ரெசார்ட் உடைகளை அறிமுகப்படுத்திய முதல் சில ஆடை வடிவமைப்பாளவர்களுள் வெண்டல் ராட்ரிக்ஸ் முதன்மையானவர். இத்தகையவரின் திடீர் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தம் கொள்கிறோம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக