குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட
நிலையில் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக குற்றவாளியாக
அறிவிக்கப்பட்ட வினய் சர்மாவின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரரிக்கிறது.
நாட்டையே அதிர்ச்சியாக்கிய டெல்லியில்
மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில்
மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா குடியரசுத்
தலைவர்க்கு கருணை மனு ஒன்றை அனுப்பினான்.ஆனால் இம்மனுவை குடியரசு தலைவர் ராம்நாத்
கோவிந் நிராகரித்தார்.
இந்நிலையில் இதனை எதிர்த்து
உச்சநீதிமன்றத்தில் வினய் மனு தாக்கல் செய்திருந்தான்.ஏற்கனவே பலமுறை
அறிவிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கான தேதிகள் மாற்றப்பட்டு வருவதற்கு
குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை அளித்து வருவதே காரணம்
என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிகின்றனர். இந்நிலையில் இத்தையக அடுத்தடுத்து தாக்கல்
செய்யபட்ட மனுக்களினால் ஒத்தி வைக்கப்பட்ட குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கு
புதிய தேதியை நிர்ணயிப்பதில் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின்
தாய் ஆஷாதேவி நிலவரத்தை கண்டு நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர் விட்டு கதறி
அழுதார்.நிர்பயாவிற்கு நீதி கிடைக்க தாமதமாவதை அறிந்து வேதனை அடைந்துள்ளார்.மேலும்
நாட்டு மக்களும் இந்த வழக்கின் விசாரணைகளை எல்லாம் அவைகள் செல்லும் திசைகளையும்
உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக