Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 பிப்ரவரி, 2020

டேய் வாடா ..வாடா ..செருப்பை கழற்றுடா -சிறுவனை அழைத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் சீனிவாசன்

டேய் வாடா ..வாடா ..செருப்பை கழற்றுடா -சிறுவனை அழைத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் சீனிவாசன்



மைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்னது சர்ச்சையாக மாறியுள்ளது. 
நீலகிரி மாவட்டம் முதுமையில் யானைகள் முகாம் நடைபெறுகிறது.இதற்கான நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.அப்பொழுது, அமைச்சர் சீனிவாசன் அங்கு சென்றபோது அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது.
The inauguration of the rejuvenation camp for captive elephants in the Mudumalai Tiger Reservce (MTR) were overshadowed as State forest minister, Dindigul C. Sreenivasan, made a tribal boy remove his slippers, so that he could enter a shrine. @THChennai pic.twitter.com/jBfiyMVbC2
— Rohan Premkumar (@ThinBrownDuke26) February 6, 2020

அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார்.உடனே இரண்டு சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன்  அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக