Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 15 பிப்ரவரி, 2020

பரவாயில்ல நாங்க வெயிட் பண்றோம்! ஏனென்றால் அவ்ளோ வொர்த்து!





ப்போ நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போனை சேர்த்துள்ளது. அதாவது ஒப்போ A31 என பெயரிடப்பட்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

நேற்று இந்தோனேசிய சந்தையில் களமிறங்கிய ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (இந்திய மதிப்பின்படி) தோராயமாக ரூ .13,524.ஆகும்.

தற்போது வரையிலாக இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் எப்போது இந்திய உள்ளூர் ஒப்போ ஸ்டோர் மற்றும் பிற உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களை வந்து அடையும் என்பது பற்றிய போதுமான விவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் "பராவாயில்லை நாங்க வெயிட் பண்றோம்" என்று கூற வைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது.

ஒப்போ A31 அம்சங்கள்:
டிஸ்பிளே
6.5 இன்ச் எச்டி+ வாட்டர் டிராப்
ப்ராசஸர்
மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட்
மெமரி
4 ஜிபி ரேம் + 128 ஜிபி
மைக்ரோ எஸ்டி ஸ்லாட்
உள்ளது
ரியர் கேமரா
12MP + 2MP + 2MP
செல்பீ
8MP கேமரா
கைரேகை சென்சார்
உள்ளது
பேட்டரி
4,230 எம்ஏஎச்
இயங்குதளம்
ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ்

வாருங்கள் சுற்றி வளைக்காமல், நேரடியாக அம்சங்களுக்கும் செல்வோம். ஒப்போ ஏ31 ஆனது 6.5 இன்ச் அளவிலான எச்டி+ வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவை, 1600 x 720 பிக்சல்கள் அளவிலானா ஸ்க்ரீன் ரெசல்யூஷன் மற்றும் 20: 9 அளவிலான திரை விகிதத்துடன் கொண்டுள்ளது.

இது மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் கொண்டு இயங்குகிறார் மற்றும் இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகம் உள்ளது. தவிர மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக சேமிப்பகத்தை விரிவாக்க கூடிய ஆதரவையும் வழங்குகிறது.

கேமரத்துறையை பொறுத்தவரை, ஒப்போ ஏ31 ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை பெற்றுள்ளது.

அதில் 12 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரெய்ட் லென்ஸ் + மற்றொரு 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ லென்ஸ் ஆகியவைகள் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 8 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது, இது 0.47 விநாடிகளுக்குள் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வதாக நிறுவனம் கூறுகிறது.

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,230 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 14 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங்கையும் 7 மணி நேர கேமிங் நேரத்தையும் அளிக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் மூலம் இயங்குகிறது மற்றும் இது அனைத்து நிலையான இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக