Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 15 பிப்ரவரி, 2020

புதிய Hyundai Grand i10 Nios Sportz Turbo காரின் விலை அறிவிப்பு..!



திகாரப்பூர்வமாக விற்பனைக்கு வருவதற்கு முன்பே, ஹூண்டாய் நிறுவனம் புதிய கிராண்டு ஐ10 நியாஸ் ஸ்போர்ட்ஸ் டர்போ காரின் விலையை அறிவித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்டு ஐ10 நியாஸ் ஸ்போர்ட்ஸ் டர்போ காருக்கு ரூ. 7.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய நியாஸ் ஸ்போர்ட்ஸ் டர்போ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 98 பிஎச்பி பவர் மற்றும் 171 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்டு ஐ10 நியாஸ் காரின் உயர் ரக அஸ்டா ட்ரிம் காரில் 1.0 லிட்டர் எஞ்சின் வழங்கப்படவில்லை. இந்த காரில் 15 அங்குல அலாய் சக்கரங்கள், பின்பக்க இருக்கைக்காக ஹெட்ரெஸ்டுகளை சரிசெய்யும் அம்சம், லெதரால் வேயப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவை உள்ளன.

புதிய ஸ்போர்ட்ஸ் டர்போ மாடலின் பின்பக்கத்தில் டீஃபாகர், பார்க்கிங் கேமராக்கள், ஃபாக் விளக்குகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கொண்ட 8 அங்குல தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் அமைப்பு, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்டு ஐ10 நியாஸ் ஸ்போர்ட்ஸ் டர்போ காரின் முன் மற்றும் ப்ன்பக்கத்தில் டர்போ பேட்ஜுகள் உள்ளன. பின்பக்கத்திலுள்ள பூட் லிப்புக்கு அருகே இந்த பேட்ஜுகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரினுடைய உட்புறம், கருப்பு மற்றும் சிவப்பு நிறக் கலவைகளில் தயாராகியுள்ளது.

புதிய ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ் கார்- ஸ்போர்ட்ஸ் டர்போ மற்றும் ஸ்போர்ட்ஸ் டர்போ டூயல் டோன் என இரண்டு வேரியன்டுகள் இடம்பெற்றுள்ளன. அதில் கிராண்டு ஐ10 நியாஸ் ஸ்போர்ட்ஸ் டர்போ காருக்கு ரூ. 7.68 லட்சம் மற்றும் ஸ்போர்ட்ஸ் டர்போ டூயல் டோன் காருக்கு ரூ. 7.73 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை அனைத்தையும் எக்ஸ்-ஷோரூம் இந்தியா மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.


தற்போது வரை இந்த காருக்கு நேரடியான போட்டியாளர் என எதுவுமில்லை. எனினும் ஃபோக்ஸ்வேகன் போலோ 1.0 டி.எஸ்.ஐ மாடலை போட்டி மாடல் என குறிப்பிடலாம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஹூண்டாய் நிறுவனம் காட்சிப்படுத்திய மற்றொரு மாடல் புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவி கார். இந்த கார் வரும் மார்ச் 17ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. ஏற்கனவே இதற்கான புக்கிங் பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.


புதிய வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங் அப்டேட்டுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் மூன்று வித எஞ்சின் தேர்வுகளையும், பல்வேறு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் பெற்றுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்புகளில் ரூ. 15 ஆயிரம் முன்பணத்தில் இந்த காருக்கு புக்கிங் நடைபெறுகிறது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஸ்போர்ட்ஸ் டர்போ கார் சிறப்பான விற்பனையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேட்டுக்கு ஏற்றவாறு, இந்த காரில் குறிப்பிட்ட சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக