பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.
அதிலும் குறிப்பாக காலை நேர உணவாக எடுத்துக் கொண்டால், அன்றைய நாள் முழுக்க ஆறு்றலுடனும்
புத்துணர்வுடனும் இருக்க முடியும். அதில் உங்களுடைய தேவையைப் பொறுத்து பழங்களை மாற்றிக்
கொள்ளலாம். எந்தெந்த பழங்களை எதற்கான சாப்பிட வேண்டும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பிரேக்ஃபாஸ்ட்
ஒவ்வொரு பழங்களிலும் ஏராளமான ஆக்ஸினேற்றிகள், பைட்டோ நியூட்ரியன்கள், விட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது ஏன் உங்கள் தலை முதல் உச்சங்கால் வரை, உங்க உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க பழங்கள் மட்டுமே போதுமானது.
வீக்கத்தை குறைக்க, தலைமுடி வளர, சருமம் பளபளப்பு பெற, இதய ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம், கல்லீரல் ஆரோக்கியம், மலச்சிக்கல் போக்க இப்படி பயன்களை அடுக்கி கொண்டே போகலாம். எனவே இனி தினமும் உப்புமா, இட்லி, முட்டைன்னு காலையில் சாப்பிடுவதற்கு பதிலாக நாங்கள் கூறும் பழவகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
ப்ரூட் காம்போ
ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு குணங்களும் சுவையும் சத்துக்களும் வாய்ந்தவை. எனவே இந்த பழங்களை உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப நீங்கள் எடுத்துக் கொள்ள முயலலாம். உதாரணமாக சிலருக்கு சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அவர்கள் பியூட்டி பிளேட் பழங்களை தேர்ந்தெடுக்கலாம். பப்பாளி, பிளாக்பெர்ரி, பரங்கிப் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படி நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, உடம்பிற்கு எனர்ஜியை தர, நோயெதிப்பு சக்தியை கூட்ட என்று நாங்கள் ஒவ்வொரு ப்ரூட் காம்போ தருகிறோம்.
நீங்கள் வேண்டும் என்றால் திங்கள், செவ்வாய் என்று ஏழு நாட்கள் ஒவ்வொரு ப்ளேட் காம்போவை ருசிக்கலாம். இதனால் நீங்கள் எல்லா விதமான பயன்களையும் பெற முடியும். உங்கள் காலை உணவை இந்த மாதிரி ப்ரூட் காம்போ முறைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
அழற்சி எதிர்ப்பு
- செர்ரி
- அன்னாசி பழம்
- ப்ளூ பெர்ரி
அன்னாசி பழத்தில் விட்டமின் சி, புரோமலைன் என்ற என்சைம் அடங்கி உள்ளது. இது குடலில் ஏற்படும் அழற்சியை போக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. புரோட்டீன் உணவுகளை செரிக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ப்ளூ பெர்ரி யிலும் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் விட்டமின் ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் இருப்பதால் அழற்சி தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஆந்தோசயனின் நிறமி தான் பெர்ரிகளுக்கு நிறத்தை கொடுக்கிறது.
செர்ரியில் இருக்கும் பினோலிக் பொருள் அழற்சியை எதிர்த்து போரிடுகிறது எனவே அழற்சியை விரட்ட நினைப்பவர்கள் காலை பிளேட்டில் இந்த மூன்று பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும் பழத்தட்டு
- திராட்சை
- கிவி
- ஸ்ட்ராபெர்ரி
நமது நோயெதிப்பு சக்தி வலுவாக இருந்தாலே எந்த நோயும் நம்மை அண்டாது. கிவி யில் விட்டமின் சி இருப்பதால் இது நோயெதிப்பு சக்தியை அதிகரித்து செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.
திராட்டையிலும் விட்டமின் சி உள்ளது. ஸ்ட்ராபெர்ரி யில் விட்டமின் சி, ஏ மற்றும் அதன் விதைகளில் உள்ள மினரல்கள் எல்லாம் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
குறிப்பு
எனவே உங்களுக்கு அடிக்கடி சலதோஷம் பிடித்தாலோ அடிக்கடி உடல் உபாதைகள் வந்தாலோ உங்க நோயெதிப்பு மண்டலத்தை வலுப்படுத்த இந்த பழத்தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆன்டி ஆக்ஸிடன்கள்
- அத்திப்பழம்
- கருப்பு திராட்சை
- மாதுளை பழம்
இந்த மூன்று பழங்களும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது. இவை சரும செல்கள் இறந்து போவதை தடுத்து நம்மை இளமையாக வைக்க உதவுகிறது. இந்த பழங்களை எடுத்து வந்தால் சீக்கிரம் வயதாகுவதை தடுக்க முடியும்.
சீக்கிரம் வயதாக வேண்டாம் என்று நினைப்பவர்கள் ரெட் வொயின் எடுத்து வரலாம். ஏனெனில் கருப்பு திராட்சையின் தோலில் இருக்கும் ரிவர்ஸ்டெல் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.
மேலும் திராட்சையில் லுடின், ஜீயாக்சாண்டின் இருப்பது நம் கண் பார்வைக்கும் சருமத்தை சூரிய னிடம் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்தும் காக்கிறது. மாதுளை பழத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் சரும செல்களை பாதுகாக்கலாம். ஏனெனில் இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம்.
அத்திப் பழம் தாதுக்கள் நிறைந்த பழம். இதில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்புச் சத்து, காப்பர், விட்டமின் ஏ, ஈ மற்றும் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
எனவே இந்த ஆன்டி ஆக்ஸிடனட் பழங்கள் உங்களை இளமையாக நோய் நொடி இல்லாமல் வைக்க உதவுகிறது. எனவே இந்த சத்தான பழங்களை காலையில் சாப்பிட முற்படுங்கள்.
நச்சுக்களை வெளியேற்றும் பழங்கள்
- கோஜி பெர்ரி
- தர்பூசணி
- லெமன்
தர்பூசணியில் 92 % தண்ணீர் சத்து உள்ளது. எனவே கோடை காலத்தில் கிடைக்கும் இந்த பழத்தை நீங்க சாப்பிட்டால் நச்சுக்களை எளிதாக வெளியேற்றி விடும். குளுதாதயோன் எனப்படும் ஒரு நச்சுத்தன்மை எதிர்ப்பு பொருளும் இதில் உள்ளன. அதைத் தவிர லைக்கோபீன், விட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்களும் இருப்பது இதன் சிறப்பு. எனவே உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க விரும்புபவர்கள் தர்பூசணி சாப்பிடுங்கள்.
லெமன் நச்சுத்தன்மையை போக்கும் சிறந்த ஒன்று. இதை நீங்கள் காலையில் எழுந்ததும் ஜூஸ் போட்டு வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தால் மலம் கழிப்பது சுலபமாகும் வயிற்றில் இருக்கும் கசடுகள் வெளியேறி விடும். இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மை இந்த வேலைகளை செய்கிறது.
கோஜி பெர்ரி ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச் சத்து, கோலைன் போன்றவை இருப்பது நமது கல்லீரலை எளிதாக சுத்தப்படுத்துகிறது. எனவே காலையில் வயிறு சுத்தமாக இந்த பழங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
அழகுக்கான பழத்தட்டு
- பிளாக் பெர்ரி
- பப்பாளி
- பரங்கிப்பழம்
பப்பாளியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் சரும போஷாக்குக்கு தேவையான கொலாஜெனை உற்பத்தி செய்யும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் உங்கள் சருமம் சீக்கிரம் தொய்வடையாமல் இளமையாக இருக்கும். மேலும் இதிலுள்ள பாப்பேன் என்ற என்சைம் சரும பாதிப்பை சரி செய்கிறது.
பிளாக் பெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் ஏ மற்றும் சி சரும பாதுகாப்பை கொடுக்கின்றன.பரங்கிப் பழம் பீட்டா கரோட்டீன் உடையது.
இதை சாப்பிடும் போது இதிலுள்ள பீட்டா கரோட்டீன் விட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு கூந்தல் வளர்ச்சிக்கும், சருமம் பளபளப்பாக மென்மையாக இருக்க உதவி செய்கிறது. எனவே இந்த மூன்று பழங்களை எடுத்துக் கொண்டு வந்தால் உங்க சருமம் மற்றும் கூந்தல் அழகு பெறும்.
ப்ரூட் காம்போவின் முக்கியத்துவம்
இப்படி பழங்களை கூட்டாக சேர்த்து சாப்பிடுவது நம்மளுக்கு பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது.
பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவிற்கு பதிலாக இந்த ப்ரூட் காம்போ சரும அழகை தருகிறது, நோயெதிப்பு சக்தியை கூட்டுகிறது, வயதாகுவதை தடுக்கிறது, நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது. இவ்வளவு நன்மைகள் கொடுத்தால் அதை எப்படி வேண்டாம் என்று சொல்லுவோம்.
ஆற்றலை தரும் பழங்கள்
- வாழைப்பழம்
- அவகேடா
- ஆப்பிள்
வாழைப்பழத்தில் ஏகப்பட்ட எனர்ஜி இருக்கிறது. காலையில் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
அவகேடா ஒரு வெண்ணெய் பழம். இதிலுள்ள கொழுப்புகள் நம் செரிமானத்தை மெதுவாக்கி நீண்ட நேரம் ஆற்றலுடன் இருக்க உதவும். எனவே இதை உடற்பயிற்சி செய்த பின் எடுத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பசிப்பதை இதன் மூலம் தடுக்கலாம்.
ஆப்பிள் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்துகள் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் நீங்கள் நாள் முழுவதும் எனர்ஜியுடன் திகழ முடியும். எனவே ஆபிஸ்யில் சோம்பேறித்தனம் இல்லாமல் ஆற்றலுடன் வேலை செய்ய இந்த 3 பழங்களை சாப்பிட்டு விட்டு போங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக