கரூர் அரசு
கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மீது போக்ஷோ வழக்கில் பொய் புகார் கொடுத்த
மனைவி மற்றும் கள்ளக்காதலன் தலைமறைவு ஆன சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கரூர்
தாந்தோன்றிமலையில் கடந்த 1966 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுமார் 50 வருடங்களுக்கு
மேலாக செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியானது பல அரசியல் வாதிகளையும், பல
கல்வியாளர்களையும், பல சாதனையாளர்களையும் உருவாக்கியதோடு, கடந்த சில வருடங்களுக்கு
முன்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து தன்னாட்சி நிர்வாகத்திற்கு மாறியது.
இந்த புகழ் வாய்ந்த இந்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் தற்போது அங்கே
பணியாற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் க.ராஜேந்திரன் மீது சேலம் மாவட்டம்,
ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் அவரது மனைவியும், அவரின் கள்ளக்காதலன் துணையோடு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொய் புகார் அளித்துள்ள சம்பவம் இப்பகுதியில்
பரபரப்பினை உருவாக்கியுள்ளது.
இந்த
விஷயத்தினை நாம் விசாரித்தால், ஏற்கனவே, மனைவி மீதும், இந்த மனைவியின்
கள்ளக்காதலன் மீதும் அவர் கொடுத்த புகாருக்கு 1 மாத கால வித்யாசத்தில் பழிவாங்கவே
இந்த சம்பவம் என்கின்றனர் கரூர் அரசு கலைக்கல்லூரி வட்டாரம்
சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணி நிறவல்
மூலமாக, கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரிக்கு உடற்கல்வி இயக்குநராக வந்தவர்
முனைவர் ராஜேந்திரன், இவர் தற்போது வரை அங்குள்ள மாணவ, மாணவிகளை விளையாட்டு
வீரர்களாக மாற்றி வருவதோடு, மாநில அளவிலும், தேசிய அளவிலும் அளவில்லாத சாதனைகளை
புரிய ஒரு படிக்கட்டு போல செயல்பட்டு வருவதாக இதே அரசு கல்லூரியில் படிக்கும்
மாணவ, மாணவிகள் கூறும் தருவாயில், இவரது மனைவி சந்திரா தற்போது சேலம் அரசு மகளிர்
கலைக்கல்லூரியில் இயற்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
தன்னுடைய மனைவிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவரது சொந்த முயற்சியில் இயற்பியல்
துறையில் உதவி பேராசிரியராக பணி வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே
அவருடைய மனைவியின் மாமா காவல்துறையினை சார்ந்த சரவணன் ஆகிய இருவருக்கும் இடையே
கள்ளத்தொடபு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும்,
ராஜேந்திரனுடைய மாமனார் வீட்டில் இவரது மனைவியும், மகள்கள் இருவரும் இருந்த
நிலையில், மனைவி சந்திராவின் மாமா சரவணன் என்பவருக்கும், சந்திராவிற்கும் இடையே
கள்ளத்தொடர்பு இருந்துள்ளதை தெரிந்த நிலையில், அவரது மூத்த மகள் அவரை
கண்டித்துள்ளார். இதனையடுத்து மூத்த மகளை அவரது தாயும், கள்ளக்காதலுடன் சேர்ந்து
மிரட்டி இதனை வெளியே சொன்னாய் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி, பாலியல் பலாத்கார
முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளனர். இதனையடுத்து தந்தை ராஜேந்திரன் உதவியுடன் கடந்த
டிசம்பர் மாதம் 22 ம் தேதி, சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்
புகார் கொடுக்கப்பட்டு, இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தலைமறைவானார்கள்.
பின்பு, இதற்கு பழிக்கு பழி வாங்க, இவருடைய இளைய மகள் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) அடித்து மிரட்டி
தந்தையே பாலியல் புகாரில் சிக்க வைக்க, தன்னுடைய இளைய மகளை பயன்படுத்தி, அதே சேலம் மாவட்டம், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து ராஜேந்திரன் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சந்திரா
அவர்கள் மீது
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மகளின் முன்னரே கள்ளக்காதலில் ஈடுபட்ட தாயார்
மற்றும் கள்ளக்காதலனை கண்டித்து போடப்பட்ட எப்.ஐ.ஆருக்கு பழிக்கு பலி வாங்க,
போடப்பட்ட இந்த இரு வழக்குகளினால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என்று
தந்தைக்கு தெரிய வர, தாயாரோ, இதுவரை அதுகுறித்து எந்த வித செயலிலும் ஈடுபட
முயல்வதில்லையாம்.
இந்த இரு
சம்பவங்கள் சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் கரூர் அரசு
கலைக்கல்லூரிகளிடையே மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவருடைய
மூத்த மகள் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) ராஜேந்திரனின் வீட்டில் இருந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக