Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 பிப்ரவரி, 2020

“இத பண்ணாதீங்க ப்ளீஸ்” திவாலுக்கு நெருக்கத்தில் வோடாபோன் ஐடியா!


பாக்கியைச் செலுத்துங்கள்
ன்..? என்ன ஆச்சு..? நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிறுவனம் திடீரென நடுத் தெருவுக்கு வந்துவிடும் எனச் சொல்கிறார்களே ஏன்..?
வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கும், மத்திய அரசின் டெலிகாம் துறைக்கும் என்ன பிரச்சனை..?
ஏன் அரசுக்கு வோடாபோன் ஐடியா நிறுவனம் பணம் கொடுக்க வேண்டும் என பல கேள்விகளுக்கும் இந்த கட்டுரையில் விடை காண்போம். முதலில் AGR Dues என்றால் என்ன என்பதில் இருந்து தொடங்குவோம்.
கணக்கு
AGR dues என்றால் ஆங்கிலத்தில் AGR - Adjusted Gross Revenue dues என்று பொருள். டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வோரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல் எழுந்தது.
அரசு தரப்பு
மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.
டெலிகாம் நிறுவனங்கள்
ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.
உச்ச நீதிமன்றம்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான், சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கிட்டு இருக்கிறார்கள். இந்த தீர்ப்பில் கணக்கிட்ட சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீர்ப்பு
எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு, இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் செலுத்தச் சொல்லிக் கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கினார்கள். டெலிகாம் வியாபாரத்தையே பெரிதும் நம்பி இருக்கும் ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது இந்த தீர்ப்பு.
சட்ட நடவடிக்கைகள்
மேலே சொன்ன உச்ச நீதிமன்ற தீர்ப்பு-ஐ மறு சீராய்வு செய்யக் கோரியது டெலிகாம் நிறுவனங்கள். ஆனால் வழங்கிய தீர்ப்பில் மறு சீராய்வு செய்ய எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை. எனவே இந்த மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகச் சொன்னது உச்ச நீதிமன்றம்.
பாக்கியைச் செலுத்துங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை கூடிய உச்ச நீதிமன்றம், டெலிகாம் நிறுவனங்கள் ஒழுங்காக தன் லைசென்ஸ் தொகைகளை முழுமையாகச் செலுத்த வேண்டும் என கண்டித்து இருந்தது. வோடாபோன் ஐடியாவோ சுமாராக 56,700 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டி இருக்கிறது. நேற்று வோட. ஐடியா 2,500 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டதாகவும், மேலும் 1,000 கோடி ரூபாயை இந்த வார இறுதிக்குள் செலுத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பணம் இல்லை
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வோடாபோன் ஐடியா நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. 2019-ம் ஆண்டின் முடிவில் சுமாராக 2 லட்சம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறது. வோட. ஐடியாவிடம் சுமாராக 3,500 கோடி ரூபாய் பணம் இருக்கலாம். அரசுக்கு பணம் செலுத்துவதோடு சுமார் 30 கோடி வாடிக்கையாளர்களுக்கும் இவர்கள் சேவை வழங்க வேண்டி இருக்கிறது.
பண்ணா காலி தான்
வோடாபோன் ஐடியா நிறுவனம், பேங்க் கேரண்டியை அரசிடம் கொடுத்து இருக்கிறது. இந்த பேங்க் கேரண்டியை மட்டும் வங்கியிடம் கொடுத்து பணத்தை வாங்கிவிட்டால், வோடாபோன் ஐடியா நிறுவனத்தை முழுமையாக சாத்த வேண்டியது தான் என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி (Mukul Rohatgi) சொல்லி இருக்கிறார்.
பணம் வராது
ஒருவேளை, வோடபோன் ஐடியா கொடுத்த பேங்க் கேரண்டியை வங்கியிடம் கொடுத்து பணத்தை எடுக்க முயற்சி செய்தால், வோட. ஐடியா கடையைச் சாத்த வேண்டி இருக்கும். அப்படி நிறுவனத்தை மூடினால், திவால் நடவடிக்கைகள் தொடங்கப்படும். பிறகு அரசுக்கு வர வேண்டிய பணமும் வராது எனவும் சொல்கிறார்கள்.
ஏற்றுக் கொள்ளவில்லை
நேற்று உச்ச நீதி மன்றத்தில், வோட ஐடியா நிறுவன தரப்பு, முதலில் 2,500 கோடி ரூபாயும், வார இறுதிக்குள் 1,000 கோடி ரூபாய் செலுத்துவதாகவும் சொன்னார்கள். மீதி பணத்தைச் செலுத்த கூடுதல் நேரமும் கேட்டார்கள். அதோடு பேங்க் கேரண்டியை பயன்படுத்த வேண்டாம் மற்றும் எந்த ஒரு கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பு
இன்று வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் தலைவர் குமார மங்களம் பிர்லா மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவீந்தர் தக்கர், மத்திய அரசின் டெலிகாம் செயலர் அன்சு பிரகாஷ் அவர்களைச் சந்தித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த சந்திப்பில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பேங்க் கேரண்டியைப் பற்றிப் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக