ஆட்டோ எக்ஸ்போ 2020ல் ரெனோ
நிறுவனத்தின் சார்பில் தற்போது டஸ்ட்டர் எஸ்யூவி காரில் கூடுதலான பவரை
வெளிப்படுத்தும் வகையில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடல் வரும் ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில்
விற்பனைக்கு வர உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளமாசுக்கட்டுப்பாட்டு
வாரியத்தின், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப
தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களான,
- இதில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 156 ஹெச்பி பவர் மற்றும்
- 250 என்எம் டார்க் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
- டஸ்ட்டர் டாப் வேரியண்ட் RXZ -ல் 17 அங்குல அலாய் வீல்
- ,எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப்,
- ரிமோட் வழியாக கேபின் ப்ரீ-கூலிங் ஃபங்க்ஷன் மற்றும்
- ஆட்டோ ஏசி கட்டுப்பாட்டும் அடங்கும்.
- இது க்ரூஸ் கட்டுப்பாடு,
- ஏபிஎஸ் உடன் இரட்டை முன் ஏர்பேக்குகள்,
- ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும்
- 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகியவற்றை பெற உள்ளது
இந்த
நவீன மாடல் காரின் வருகை கார் சந்தையில் ஒரூ திருப்பத்தை ஏற்படுத்தும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக