>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 8 பிப்ரவரி, 2020

    Google எச்சரிக்கை! சீனாவில் இருந்து அடுத்த சிக்கல்; இந்த 24 ஆப்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யவும்!

     Image result for unistall apps
    யனர்களின் ரகசிய தகவல்களை சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு (சேவையகங்களுக்கு) அனுப்பும் மால்வேரை கொண்டிருப்பதாக கூறி மொத்தம் 24 ஆப்கள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட ஆப்களை தெரிந்தோ தெரியாமலோ, கூகுள் பிளே ஸ்டார் வழியாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி வரும் பயனர்கள் அவற்றை உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
    382 மில்லியன்களுக்கும் மேலான ஒட்டுமொத்த டவுன்லோட்!

    இப்படியொரு மால்வேர் இருப்பதை முதலில் கண்டறிந்து அறிவித்தது வி.பி.என் ப்ரோ (VPN Pro) என்பது குறிப்பிடத்தாக்கது. வி.பி.என் ப்ரோவின் வலைப்பதிவு இடுகையின் படி, டி.சி.எல் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக 382 மில்லியன்களுக்கும் மேலான ஒட்டுமொத்த பதிவிறக்கங்களை சந்தித்த 24 ஆப்களை தன்வசம் கொண்டுள்ளது. இந்த ஆப்பிள் சில ஆபத்தான பெர்மிஷன்களை கேட்கின்றன என்றும் அதில் சிலவற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் (rogueware) கூட இருந்தன என்று வி.பி.என் ப்ரோ அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
    ரோக்வேர் செய்யும் தில்லாலங்கடி வேலைகள்!
    ரோக்வேர் ஆப்கள் ஆனது ஸ்மார்ட்போனில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்வது போல பாசாங்கு செய்யுமாம். மேலும் அதற்காக உங்களை பணம் செலுத்தும்படியும் கேட்குமாம் அல்லது இன்னும் அதிக மால்வேர்களை சேர்க்க வழிவகுக்குமாம். இப்படியான ஆபத்துகளை உள்ளடக்கிய ஷென்சென் ஹாவ்க்கின் சில ஆப்கள் 10 முதல் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ளது என்பது தான் மிகப்பெரிய கொடுமை. இதோ அந்த 24 ஆப்களின் பெயர்கள்; இதில் ஏதேனும் ஒரு ஆப் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தாலும் கூட, கொஞ்சம் கூட தாமதிக்காமல் அதை அன்இன்ஸ்டால் செய்து விடவும்:
    வேர்ல்ட் ஸூ - லேசர் பிரேக்

    01. வேர்ல்ட் ஸூ (World Zoo)
    02. பஸில் பாக்ஸ் (Puzzle Box)
    03. வேர்ல்ட் க்ராஸி! (Word Crossy!)
    04. சாக்கர் பின்பால் (Soccer Pinball)
    05. டிக் இட் (Dig it)
    06. லேசர் பிரேக் (Laser Break)
    வேர்ட் க்ரஷ் - டர்போ ப்ரவுஸர்

    07. வேர்ட் க்ரஷ் (Word Crush)
    08. ம்யூசிக் ரோம் (Music Roam)
    09. பைல் மேனேஜர் (File Manager)
    10. சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder)
    11. ஜாய் லாஞ்சர் (Joy Launcher)
    12. டர்போ ப்ரவுஸர் (Turbo Browser)
    வெதர் போர்காஸ்ட் - சூப்பர் பேட்டரி

    13. வெதர் போர்காஸ்ட் (Weather Forecast)
    14. கேலண்டர் லைட் (Calendar Lite)
    15. கேண்டி செல்பீ கேமரா (Candy Selfie Camera)
    16. பிரைவேட் ப்ரவுஸர் (Private Browser)
    17. சூப்பர் கிளீனர் (Super Cleaner)
    18. சூப்பர் பேட்டரி (Super Battery)
    வைரஸ் கிளீனர் 2019 - கேண்டி கேலரி

    19. வைரஸ் கிளீனர் 2019 (Virus Cleaner 2019)
    20. ஹை செக்யூரிட்டி (Hi Security 2019)
    21.ஹை விபிஎன், ப்ரீ விபிஎன் (Hi VPN, Free VPN)
    22. ஹை விபிஎன் ப்ரோ (Hi VPN Pro)
    23. நெட் மாஸ்டர் (Net Master)
    24. கேண்டி கேலரி (Candy Gallery)

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக