ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவர் பிறக்கின்ற நேரத்தில் ஜாதகக் கட்டங்களில் கிரகங்களின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைக் கொண்டு அந்த ஜாதகரின் குண இயல்புகள், வாழ்வியல் சம்பவங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டுச் சொல்வார்கள். அதைப்போல கைகளில் உள்ள ரேகைகளின் அடிப்படையிலும் ஒருவருடைய குணநலன்களையும், எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இன்று கையில் உள்ள ரேகைகளை பற்றி அறிந்து கொள்வோம்.
ஆயுள் ரேகை :
ஆயுள் ரேகையைக் கொண்டு ஒருவருக்கு நீண்ட ஆயுளா? அல்லது குறைவான(அற்ப) ஆயுளா? என்பதைப் பற்றியும், உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
புத்தி ரேகை :
புத்தி ரேகையைக் கொண்டு ஒருவருடைய புத்திசாலித்தனத்தையும், புத்தியால் கிடைக்கும் வெற்றியை பற்றியும், உயர்கல்வி பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
இருதய ரேகை :
இந்த ரேகையைக் கொண்டு ஒருவருடைய அன்பு வயப்படும் தன்மை, காதல், உணர்ச்சி வசப்படும் தன்மை மற்றும் கூட்டுத்தொழிலில் வெற்றி பெறுவாரா என்பதைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
விதி ரேகை :
விதி ரேகையைக் கொண்டு ஒருவருக்கு செல்வ சேர்க்கை உண்டா? அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவாரா? என தெரிந்துகொள்ள முடியும்.
காதல் ரேகை :
காதல் ரேகையின் மூலம் ஒருவர் காதலில் வெற்றி பெறுவாரா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
செவ்வாய் ரேகை :
செவ்வாய் ரேகை ஆயுள் ரேகைக்கு இணையாக காணப்படும். இந்த ரேகை வலுப்பெற்று காணப்பட்டால் நிலபுலன்கள், வீடு ஆகியவை அமையும்.
சூரிய ரேகை :
ஒருவருக்கு சூரிய ரேகை இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரராக இருப்பார். மேலும், வெற்றிகள் அவரை தேடி வரும்.
சுக்கிர ரேகை :
சுக்கிர ரேகையைக் கொண்டு தொடர்ச்சியான உடல்நல பிரச்சனைகள், வியாபார புத்திசாலித்தனம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக