திங்கள், 24 பிப்ரவரி, 2020

ஆள்காட்டி விரல் !

Image result for ஆள்காட்டி விரல் !
ள்காட்டி விரல் பிறரை சுட்டிக்காட்ட உதவுவதால் இதற்கு ஆள்காட்டி விரல் என்ற பெயர் ஏற்பட்டது. இது குரு மேட்டிற்கு மேலே அமைந்து இருப்பதால் இதை குருவிரல் என்றும் சொல்வதுண்டு.

ஆள்காட்டி விரல் பாம்பு விரலை (சனி விரல்) விட உயரம் குறைவாக இருக்க வேண்டும். மோதிர விரலுக்கு (சூரிய விரல்) சமமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக மோதிர விரலை விட, ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கும் ஆண்கள் கணிதத்தில் சிறந்தவர்களாக இருப்பார்களாம். சிக்கலான கணக்குகளுக்கும் மிகவும் விரைவாக தீர்வு காண்பார்களாம்.

உங்களுக்கு ஆள்காட்டி விரல் இப்படி இருக்கா?

ஆள்காட்டி விரல் வளைவில்லாத விரலாக இருந்தால் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். உலக அனுபவம் மிக்கவர்கள். நீதி, நேர்மையுடன் வாழ்பவர்கள்.

இந்த விரல் வளைந்து இருப்பதைப் போல காணப்பட்டால் வீண் செலவுகளில் வல்லவராக இருப்பார்கள்.

இந்த விரல் பின்பக்கமாக வளையும் விரல் உடையவராக இருந்தால் பேசிப்பேசியே பொழுதை கழிப்பார்கள். இவர்கள் நீதிக்கும், நேர்மைக்கும் வெகுதூரமாய் இருப்பார்கள்.

இந்த விரல் உள்பக்கமாக வளைந்து இருக்குமானால் பேராசை உடையவராக இருப்பார்கள்.

இந்த விரல் பாம்பு விரல் பக்கமாக சாய்ந்து இருந்தால் பிறருடைய புத்திமதியைக் கேட்கமாட்டார்கள்.

கட்டை விரல் பக்கமாக வளைந்து இருந்தால் எந்த விஷயத்தையும் தன் இஷ்டப்படி தான் செய்வார்கள். பிறர் ஆலோசனையைக் கேட்கமாட்டார்கள்.

ஆள்காட்டி விரல் மெலிந்து இருந்தால் எந்தக் காரியத்தையும் வேகமாகச் செய்ய முடியாதவர்களாக இருப்பார்கள்.

இந்த விரல் மோதிர விரலை விட உயர்ந்து இருந்தால் உயர்ந்த பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள். எவ்வளவு கஷ்டமான வேலையையும் மிகவும் சுலபமாக செய்து முடித்து விடுவார்கள். நீதி, நேர்மைக்கு கட்டுப்படுவார்கள்.

இந்த விரல் சனி விரல் அளவுக்கு நீளமுடையதாக இருந்தால் மிகப்பெரிய பதவியை வகிப்பவர்களாக இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்