சென்னையிலிருந்து ஏறத்தாழ 38கி.மீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து ஏறத்தாழ 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம் தான் கோவளம் கடற்கரை.
சிறப்புகள் :
இந்தக் கடற்கரையில் அமைதியான காற்று, மிளிரும் கடற்கரை மணல், வண்ணமயமாக காட்சியளிக்கும் சிற்பிகள் மற்றும் பனை மரங்கள் என ரம்மியமான சூழ்நிலையில் நம் மனதை ஈர்க்கும் இடங்களாக கோவளம் கடற்கரை அமைந்துள்ளது.
இங்கு சென்றால் பாறைகள் அலைகளின் மீது மோதும் காட்சிகளையும், மணல்கள் நிறைந்த நீண்ட கடற்கரையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
இவை மற்ற கடற்கரைகளை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். இந்த கடற்கரை வளைவான தோற்றத்தை கொண்டுள்ளதால் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.
கோவளம் கடற்கரையில் நீர் சாகச விளையாட்டுகள், நீச்சல், படகு சவாரி செய்தல் உள்ளிட்டவைகள் இருக்கின்றன. இளைஞர்களை கவரும் இடமாக இந்த கடற்கரை திகழ்கின்றது.
இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் திறந்த வெளி அருங்காட்சியகம் உள்ளது. தென்மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பற்றி அந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தின் அருகில் ஒரு பூங்கா அமைந்துள்ளது. அப்பூங்காவில் சிறுவர்கள் ஆடிப்பாடி விளையாடுவதற்கு கேளிக்கை விளையாட்டுகள் அமைந்துள்ளன.
கண்ணை கவரும் வகையில் அமைந்திருக்கும் இந்த அழகிய கடற்கரையில் கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காட்சிகளைப் பார்க்கலாம்.
சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக கோவளம் கடற்கரை திகழ்கிறது.
எப்படி செல்வது?
சென்னைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
சென்னையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக