மனிதர்களின் கையில்
குரு மேடு
சனி மேடு
சூரிய மேடு
புதன் மேடு
செவ்வாய் மேடு
சந்திர மேடு
சுக்கிர மேடு
என ஏழு மேடுகள் அடங்கிய இடத்திற்கு உள்ளங்கை என்று பெயர்.
உள்ளங்கையானது அதிக ரேகைகள் இல்லாமல் பிரகாசமாகவும், விசாலமாகவும் இருந்தால் சிறப்பு வாய்ந்தவர்களாகவும், பூரண ஆயுள் உள்ளவராகவும் இருப்பார்கள்.
உள்ளங்கை மிருதுவாகவும், அழகாகவும், சிறந்த நிறமுடையதாகவும் இருந்தால் உயர்ந்த பதவி உடையவர்களாகவும், ஐஸ்வர்யம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
உள்ளங்கை பச்சை நிறமுடையதாய் இருந்தால் அவர்கள் எதிலும் ஆசை உடையவர்களாகவும், அநேகமாக சிற்றின்ப ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
உள்ளங்கையின் நான்கு மூலையும் சமானமாகவும், தட்டையாகவும், உயரமாகவும், மிருதுவாகவும், சிவப்பாகவும் இருந்தால் அவர்கள் அரசனாக விளங்குவார்கள்.
உள்ளங்கையின் நடுவில் பள்ளமாயிருந்தால் தங்கள் கையில் பணம் வரப் பெறாதவராகவும், தரித்திரமுடையவராகவும் இருப்பார்கள். அப்படி உள்ளங்கை பள்ளமாயிருந்து குண்டாயிருந்தால் அவர்கள் தரித்திரத்தில் இருந்து விடுபட்டு அதிக செல்வத்தை அடைந்தவர்களாக இருப்பார்கள்.
உள்ளங்கை அழகாகவும், மிருதுவாகவும் இருந்தால் பிறருக்கு கொடுக்கும் குணம் உடையவராய் இருப்பார்கள்.
உள்ளங்கை தடிப்பாகவும், அழுத்தமுடையதாகவும் இருந்தால் அளவு கடந்த சிற்றின்ப இச்சையுடையவர்களாய் இருப்பார்கள்.
உள்ளங்கை வறண்டு இருந்தால் கஷ்டமும், தரித்திரமும் உடையவர்களாய் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக