உள்ளங்கையில் மொத்தம் ஏழு மேடுகள் உள்ளன. அவை,
1. சுக்கிர மேடு
2. குரு மேடு
3. சனி மேடு
4. சூரிய மேடு
5. புதன் மேடு
6. சந்திர மேடு
7. செவ்வாய் மேடு
இதில் செவ்வாய் மேடு என்பது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. மேல் செவ்வாய் மேடு
2. கீழ் செவ்வாய் மேடு
இப்பொழுது இந்த மேடுகள் நமது உள்ளங்கையில் எங்கு உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.
சுக்கிரமேடு என்பது கட்டை விரலுக்கு அடிப்பாகத்திலும், குரு மேடு என்பது ஆள்காட்டி விரலுக்கு அடிப்பாகத்திலும், சனி மேடு என்பது பாம்பு விரலுக்கு கீழேயும், சூரிய மேடு என்பது மோதிர விரலுக்கு கீழேயும், புதன் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழேயும் இருக்கும் பகுதியை குறிக்கும்.
சந்திர மேடு என்பது குரு மேட்டுக்கு எதிரே உள்ள மேடாகும். மேல் செவ்வாய் மேடு என்பது சுண்டு விரலுக்கு கீழே சந்திர மேட்டுக்கு மேலே உள்ள பகுதியாகும். கீழ் செவ்வாய் மேடு என்பது குரு விரலுக்கு கீழே சுக்கிர மேட்டுக்கு மேலே உள்ள மேடாகும்.
அந்தந்த விரலுக்கு அடியில் சற்று உப்பலாக சதைப்பற்றுடன் காணப்படும் மேடுகள் உச்ச மேடு என்றும், பள்ளம் தட்டி காணப்பட்டால் நீச்ச மேடு என்றும், சமமாக காணப்பட்டால் நடுத்தர மேடு என்றும் சொல்லப்படும். உச்ச மேட்டுக்குரிய பலன்கள் நல்லவையாகவும், நீச்ச மேட்டுக்குரிய பலன்கள் கெட்டவையாகவும், சமமான மேட்டுக்குரிய பலன்கள் சமமாகவும் இருக்கும்.
இதைப்போல ஒவ்வொரு மேட்டிலும் ஒவ்வொரு விதமான குறியீடுகள் இருப்பது உண்டு. இந்தக் குறியீடுகள் நிரந்தரமானவை அல்ல. தேவைப்படும் போது தோன்றி தேவையற்ற சமயத்தில் மறைந்து விடும்.
உள்ளங்கையை விரித்தவுடன் எந்த மேடு மற்ற மேடுகளை விட அதிகமாய் உயர்ந்து காணப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இது அந்த நபருடைய குணாதிசயத்தை கண்டுபிடிக்க உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக