தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம்
அளிக்கும் வகையில் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு பெண்கள் மத்தியில்
ஆதரவு காணப்படுகிறது.
நிதி
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி
ஒதுக்கீடும், புதிய திட்டங்கள் என ஏராளமான அறிவிப்புகள் இருந்தன.
2020-21-ம்
ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை
தமிழகத்தின் 2020-21-ம் ஆண்டுக்கான
நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரைவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்வதைக் காண அவரது இரண்டு மகன்களான
ரவீந்தரநாத் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர்.
மாடத்தில் அமர்ந்திருந்து அப்பாவின் நிதிநிலைத் தாக்கலை ஆர்வத்துடன்
கண்டுகளித்தனர்.
அரசுப்
பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறை
இதில் அரசுப் பேருந்துகளில் மின்னணு
பணப்பரிமாற்ற முறையில் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
ஆன்லைன் டிரான்ஸாக்ஷன் எனப்படும் பண பரிவர்த்தனை மூலம் தற்போது பயணச்சீட்டு
வாங்குவதற்கான நடவடிக்கை பெருமளவு எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு
பேருந்தில் பயணம்
அதேபோல் அரசு பேருந்தில் பயணம்
செய்வோர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. பொதுவாக காலை
மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை சற்று
அதிகமாகவே காணப்படும்.
பெண்களுக்கு
பாதுகாப்பான பயணம்
அந்த நேரத்தில் பிக் பாக்கெட் தொள்ளை
மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணம் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் விதமாக அரசு
பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணி தொடங்கும் என தமிழக பட்ஜெட் தாக்கலில்
வாசிக்கப்பட்டது.
பொதுமக்களிடம்
நல்ல வரவேற்பு
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு
பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக பெண்களிடம் இந்த
அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக