எந்த சூழ்நிலையையும் தனதாக்கிக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப காரியத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மனதில் புதுவிதமான எண்ணங்களும், அதை சார்ந்த கற்பனைகளும் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்பட்டாலும், அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். மனை மற்றும் வாகனம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சில விரயங்கள் ஏற்பட்டாலும் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதியினரிடையே அவ்வப்போது ஆரோக்கியமற்ற விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும்.
மாணவர்களுக்கு :
கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாகும். தேவையில்லாமல் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
பெண்களுக்கு :
பெண்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தோற்றப்பொலிவு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சார்ந்த பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு சாதகமாகும். வங்கி தொடர்பான கடன் வாய்ப்புகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் புதிய முயற்சிகளின் மூலம் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கொடுக்கல், வாங்கல் சார்ந்த பணிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு சமூக பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவும், தொடர்பும் கிடைக்கப் பெறுவீர்கள். கோபத்தை விடுத்து முக்கியமான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். உங்களின் மீதான தேவையற்ற வதந்திகள் அவ்வப்போது தோன்றி மறையும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு புதிய பயிர் விளைச்சல்களில் எதிர்பார்த்த லாபம் சற்று காலதாமதமாக கிடைக்கும். விவசாய கடன்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்கும்போது அதை சார்ந்த பயிற்சிகளை பெறவும்.
கலைத்துறையினருக்கு :
கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய முயற்சிகள் மற்றும் சிந்தனைகளை செயல்படுத்தி அதன்மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதை சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும்.
பரிகாரம் :
புதன்கிழமைதோறும் பெருமாளுக்கு துளசி மாலையை அர்ப்பணித்து வழிபட்டு வர எண்ணத்தெளிவும், உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகளும் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக