வங்காளத்தின் முர்ஷிதாபாத்
மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் புதன்கிழமை இரவு 62 வயது பெண் ஒருவர் தனது சிறு
பேத்தியை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்ற முயன்றபோது கொலை செய்யப்பட்டார்.
15 வயது சிறுமி தனது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் பாட்டியுடன்
வசித்து வந்தார்.
37
வயதான குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பலமுறை துன்புறுத்த முயன்றதாக
உள்ளூர்வாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
புதன்கிழமை
இரவு, குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளே நுழைய முயன்ற போது, தனது பேத்தியை பாதுகாக்க,
அந்த வயதான பெண் வீட்டு கதவை வெளியில் இருந்து பூட்டடி உள்ளார்.
அந்தப்
பெண் வீட்டை வெளியில் இருந்து பூட்டி விட்டு, அக்கம் பக்கத்தினரின் உதவியை நாட
வெளியே ஓடி வந்தபோது, அந்த நபர், பெண்ணின் கழுத்தை இறுக்கமாக நெரித்ததாகக்
கூறப்படுகிறது.
அதன்பிறகும்
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய, அந்த நபர் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளான்.
ஆனால் உள்ளூர்வாசிகள், அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என்று, அந்த பகுதியில்
இருந்த ஒரு சாட்சி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக