ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும், புதுவிதமான செயல்பாடுகளையும், கண்ணோட்டங்களையும் கொண்டு செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்களும், சுபிட்சமும் ஏற்படும். புதுவிதமான முயற்சிகளும் அதை சார்ந்த செயல்பாடுகளும் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தகுந்த காலக்கட்டங்கள் அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல்கள் அமையும். கௌரவப் பதவிகளால் செல்வாக்கும், அதிகாரமும் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான சூழல் உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். நண்பர்களிடம் பழகும்போது சற்று கவனம் வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக கிடைக்கும். மேல்நிலை கல்வி பயணங்கள் மேற்கொள்வதற்கான உதவிகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.
பெண்களுக்கு :
மனதிற்கு பிடித்த பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சில தடைகளுக்கு பின்பே கிடைக்கப் பெறுவீர்கள். புத்திரர்கள் வழியில் தொழில் சார்ந்த உதவிகளும், சில சச்சரவுகளும் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு உத்தியோகம் சார்ந்த முறையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப ஊதிய உயர்வுகளும், பொறுப்புகளும் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்களும் மற்றும் பலருடைய ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களால் அவ்வப்போது மனவருத்தங்கள் தோன்றி மறையும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான முடிவுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவுகளை மேற்கொள்ளவும். தொழில் நிமிர்த்தமான அதிக உழைப்புகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மூலம் உற்பத்திகள் அதிகம் மேற்கொள்வதற்கான சூழல் அமையும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு கட்சி தொடர்பான பணிகள் மூலம் பொறுப்புகளும், பயணங்களும் அதிகரிக்கும். கட்சி தொடர்பான கோப்புகளை கையாளும்போது கவனத்துடன் இருக்கவும். கட்சி நிமிர்த்தமான உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாகவே கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு அரசு தொடர்பான உதவிகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனை சார்ந்த வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகளால் திருப்தியான சூழல்கள் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். பாசன வசதியின் தன்மைக்கேற்ப பயிர்களை நிர்ணயம் செய்து கொள்ளவும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்கள் கோபங்களை மறந்து நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்களது படைப்பிற்கான அங்கீகாரமும், பாராட்டுகளும் காலம் கடந்தே கிடைக்கும். சக கலைஞர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும்.
பரிகாரம் :
வெள்ளிக்கிழமைதோறும் துர்க்கையம்மனை வழிபாடு செய்து வர தொழில் சார்ந்த நெருக்கடிகள் குறையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக