தன்னலம் கருதாது, மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மனைகள் மற்றும் புதிய வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த துறைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைவாற்றலில் மந்தத்தன்மை அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை கையாளும்போது கவனம் வேண்டும்.
மாணவர்களுக்கு :
கல்வி தொடர்பான வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் மேன்மை உண்டாகும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். வெளியூர் பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
புதிய முயற்சிகளுக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும். குடும்ப பெரியவர்களிடம் கோபமான பேச்சுக்களை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். புத்திரர்களின் செயல்பாடுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தேவையற்ற செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பதன் மூலம் நற்பெயர் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் புரிவோருக்கு வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பே சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு பலதரப்பட்ட மக்களிடையே ஆதரவான சூழலும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சுயநலம் இல்லாது நேர்மையுடன் செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சுக்களில் கோபத்தை விட நிதானத்தை கடைபிடிப்பது சுபிட்சத்தை ஏற்படுத்தும். உடன் இருப்பவர்களிடம் கட்சி சார்ந்த ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு பயிர் சார்ந்த விளைச்சலில் எதிர்பார்த்த லாபம் காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கால்நடைகளால் எதிர்பாராத விரயமும், சில நேரங்களில் ஆதாயமும் உண்டாகும். அருகில் இருக்கும் நில உரிமையாளர்களிடம் தேவையற்ற கருத்துக்களையும், சச்சரவுகளையும் தவிர்ப்பது உங்கள் செல்வாக்கை மேம்படுத்தும்.
கலைத்துறையினருக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெரிய கலைஞர்களின் ஆதரவும், அறிவுரைகளும் தொழில் சார்ந்த சில நுணுக்கங்களை கற்றுத்தரும். புதுவிதமான திறமையை வெளிப்படுத்துவதற்கு தகுந்த வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கிடைக்கும் ஒத்துழைப்பு மனதைரியத்தை அதிகப்படுத்தும்.
பரிகாரம் :
சனிக்கிழமைதோறும் அருகில் இருக்கும் சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு சென்று வழிபட்டுவர முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் அகலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக