வாழ்க்கையில் ஒரு
சிலர் பிறரை ஏமாற்றுவதாக நினைத்து, இறுதியில் அவர்களே தன்னை ஏமாளியாக்கிக்
கொள்கிறார்கள். அதைப் பற்றிய சிறுகதை :
ஆற்றங்கரை ஓரமாக வழிப்போக்கன் ஒருவன்
வந்துகொண்டிருந்தான். அவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் தென்பட்டது.
வழிப்போக்கன் அதை வைரக்கல்
என்றறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்.
அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த
வியாபாரி ஒருவன், 20 ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான்
பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்.
ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத
அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்.
இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25
ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.
ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த
வழிப்போக்கனை பார்த்து, 'அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்...
அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!" என்று திட்டினான்.
அதற்கு அவன், 'அந்தக் கல்லுக்கு
என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத்
தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்" என்றான்.
இப்பொழுது யார் முட்டாள்? வழிபோக்கனா?
வியாபாரியா? இல்லை இரண்டு பேருமேவா? ஒவ்வொருவருடைய பார்வைக்கும் ஒவ்வொரு விதமாக
தெரியும்.
ஆனால் அதன் உண்மையான மதிப்பு சிலருக்கு
தெரிந்தும் அதை வேறு ஒரு காரணத்திற்காக இழந்து விடுகிறார்கள்.
அந்த வியாபாரி போல, ஐந்து ரூபாய்
அதிகமாக கொடுக்க விருப்பம் இல்லாமல் வைரத்தை இழந்து விட்டான்.
தத்துவம்
:
சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு
தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக