அனைவரிடத்திலும் அன்பும், கற்பனை திறனும், நினைவு திறனும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன் நகைகள் யாவற்றையும் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் எண்ணிய காரியங்கள் சில போராட்டங்களுக்கு பின் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயண வாய்ப்புகள் மூலம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். தம்பதியினரிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகளும், அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான சூழல்களும் உண்டாகும். பெற்றோர்களின் அரவணைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் மேன்மையான சூழலை உருவாக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் அவர்களால் மனக்கசப்புகளும் ஏற்படலாம். ஆகையால் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உற்றார், உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புத்திரர்களின் வழியில் அனுகூலமான பலன்களும், தொழில்சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும் ஏற்படும். சுயதொழில் புரிபவர்களுக்கு அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழலும், பணி உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்புடன் செயல்படுவது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளும், அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் சாதகமாக அமையும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபகரமான சூழல்கள் உருவாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புகள் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களிடம் கோபத்தை விடுத்து சில சலுகைகளை அறிவித்து வேலையை வாங்குவதன் மூலம் முன்னேற்றங்களை உருவாக்க இயலும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு கட்சி சார்ந்த துறையில் பெயரும், செல்வாக்கும் அதிகரிக்கும். தொண்டர்கள் மற்றும் சக ஊழியர்களின் இடையே ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைத்தாலும் அதற்கான செலவுகளும் சேர்ந்தே வரும். ஆசைகளை குறைத்து நிதானத்துடன் செயல்பட்டால் திட்டமிட்ட இலக்கை அடைந்து வெற்றி காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகள் எதிர்பார்த்த பயிர் விளைச்சலும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். பூக்கள், பழங்கள் மற்றும் அலங்கார பொருட்களின் மூலம் லாபம் மேம்படும். வரப்பு சார்ந்த பிரச்சனைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சங்கீதத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களின் பேச்சுக்களை நம்பி எதையும் செய்வதற்கு முன்னால் அதைப்பற்றி நன்கு சிந்தித்து செயல்படுவது உங்கள் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும்.
பரிகாரம் :
தினந்தோறும் விநாயகரை தூப தீபம் மற்றும் மலர் கொண்டு வழிபட்டு வர மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக