உடன் இருப்பவர்களை எளிதில் புரிந்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் லாபம் அடைவீர்கள். புத்திரர்கள் வழியில் சுபச்செய்திகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற சிந்தனைகள் மற்றும் குழப்பங்களால் எண்ணிய இலக்கை அடைவதில் சில தடங்கல் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் இருக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு தனவரவுகளும், பொன், பொருட்சேர்க்கையும் உண்டாகும். மனதிற்கு விரும்பிய புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புத்திரர்கள் மூலம் நற்பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். தம்பதியினரிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும். பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய எண்ணம் ஈடேறும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் தோன்றி மறையும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த வியாபாரங்கள் மூலம் தனவரவு மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் சுபிட்சம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்பங்களை கையாளும்போது தகுந்த ஆலோசனை பெற்று கையாளவும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளினால் நற்பலன்கள் உண்டாகும். வருவாய்கள் குறைந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் வாக்குறுதி அளிப்பது நன்மையளிக்கும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு :
விவசாயத்தில் உள்ளவர்களுக்கு பயிர் விளைச்சல் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விவசாயம் தொடர்பான புதிய வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் லாபங்களை மேம்படுத்துவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். திறமைக்கேற்ப செல்வமும், செல்வாக்கும் உண்டாகும். புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கான கடன் உதவிகள் சாதகமாக அமையும். மூத்த கலைஞர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மதிப்பை அதிகப்படுத்தும்.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபட்டு வர குடும்பத்தில் சுபகாரியங்களும், சுபிட்சமும் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக