Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 மார்ச், 2020

அடி சக்க.. ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற வாய்ப்பு.. ஏப்ரல் 1 முதல் அமல்..!


 வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க திட்டம்
வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைக்கு கொடுக்கப்படும் ரசீதுகள் மூலம் மாதாந்திர ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஒவ்வொரு முறையும் ரசீது வாங்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், வருவாய் துறை இந்த மாதாந்திர ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த லாட்டரி பரிசு திட்டமானது ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த உதவும் என்றும், மேலும் அரசுக்கு வருவாயை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க திட்டம்
இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அரசு அதிகாரி ஒருவர், பொதுமக்கள் தாங்கள் ஒவ்வொரு முறையும் வாங்கும் பொருட்களுக்கு ரசீதுகளை பெறும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தினை கொண்டு வந்துள்ளது வருவாய் துறை. மேலும் தற்போது இந்த மாதாந்திர ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளையும் மிக வேகமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தலாம்
மேலும் இந்த திட்டம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தி அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்க வழிவகை செய்யும் எனவும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், குலுக்கல் முறையில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் இந்த மாதாந்திர லாட்டரி திட்டத்தை அடுத்து வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யலாம்
ஜிஎஸ்டிஎன் என்று அழைக்கப்படும் ஜிஎஸ்டி நெட்வொர்க் மூலம் அறிமுகப்படுத்தவுள்ள மொபைல் ஆப் தங்களது ரசீதுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதன் மூலம் நுகர்வோர் இந்த பரிசு திட்டத்தில் பங்கேற்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு பதிவேற்றம் செய்யும் செய்யும் நபர்களை தேர்தெடுத்து ஜிஎஸ்டி லாட்டரி குலுக்கல் முறையில் தேர்தெடுக்கும். இவர்களுக்கு மாதாந்திர லாட்டரி திட்டத்தில் பரிசுத் தொகை 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
வரி வசூல் வீழ்ச்சி
என்னதான் அரசு முயற்சி செய்து வந்தாலும் ஜிஎஸ்டி வரி வசூலானது, நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் மிகவும் பின் தங்கியுள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வசூலும் மிக குறைந்துள்ளது. ஆக ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிக்கும் பொருட்டும், போளி பில்களை தவிர்க்கும் பொருட்டும் அரசாங்கத்தின் ஒரு முயற்சியாக இந்த லாட்டரி திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளது.
இவ்வளவு வரி விதிக்கப்படுகிறதா?
தற்போது நுகர்வோர் பொருட்களை வாங்கும்போதும் , சேவைகளை பெறும்போது 5,12,18,28% வரை ஜிஎஸ்டி வரி செலுத்துகின்றனர். இது தவிர ஆடம்பர பொருட்களுக்கு செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. ஆக இந்த லாட்டரி திட்டத்தின் மூலம் வரி கசிவுகளை சரி செய்து இணக்கத்தை காண வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஜிஎஸ்டி வரி வசூலின் விகிதத்தினை அதிகரிக்க உதவும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறதாம். நாமும் தான் நம்புவோமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக