விமானப்
பயணத்திற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் விமானியின்
பொறுப்பில் உள்ளவரின் அனுமதி பெற்று WiFi வசதியை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் லேப்டாப், செல்போன்கள்,
டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ் சாதனங்கள் ஆகியவற்றுக்கு WiFi வசதியை
பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதியை ஃபிளைட் மோடில் வைத்துதான் பயன்படுத்த வேண்டும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானம் வெளிச்சமில்லாத
சூழலில் பயணிக்கும்போது WiFi வசதியை பயன்படுத்த முடியாது என்றும் இந்த வசதி விரைவில்
அனைத்து விமானங்களிலும் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக