பெருந்தன்மையான குணமும், விவேகத்துடனும் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே..!!
சார்வரி வருடத்தின் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாக இருக்கக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஆதரவான சூழல் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வீடு மாற்றம் மற்றும் மனையில் புதிய வீடுகள் கட்டுவதற்கான எண்ணங்களும், முயற்சிகளும் மனதில் தோன்றும். புத்திரர்கள் மூலம் பொருள் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகளும், எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். மற்றவருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பேச்சுக்களில் கோபத்தையும், வேகத்தையும் குறைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் கருத்துக்கள் அனைவரிடத்திலும் சென்றடையும். செய்யும் முயற்சிக்கேற்ப கல்வியிலும், விளையாட்டிலும் முன்னேற்றம் உண்டாகும். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
பயனற்ற சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். விளையாட்டாக பேசும் சிறு வார்த்தைகள் கூட பிரச்சனைகளாக மாறக்கூடும். ஆகவே, பேச்சுக்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். புத்திரர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன், மனைவியிடையே சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். குறைவாகப் பேசி நிறைவாக பணியை செய்வதன் மூலம் பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளை பற்றி குறை கூறுவதை குறைத்துக்கொள்வது சக ஊழியர்கள் இடத்தில் உங்கள் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சற்று கவனம் வேண்டும். கூட்டாளிகளிடத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். துறை சார்ந்த வல்லுநர்களிடம் சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வது நன்மையளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் மற்றும் சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பொன்னான காலக்கட்டங்களாக அமையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு மற்றும் அறிமுகம் உங்கள் மீதான நன்மதிப்பையும், செல்வாக்கையும் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போதும், மற்றவர்களுக்கு உதவி செய்யும்போதும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாய பணியில் இருப்பவர்களுக்கு வேலையாட்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் லாபகரமான சூழல்கள் அமையும். அரசு தொடர்பான உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். புதிய இடம் வாங்கும்போது பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
கலைத்துறையினருக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் சார்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சமவயதினர்களிடத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர மற்றும் சொகுசு பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம் :
புதன்கிழமைதோறும் ராகு நேரத்தில் வராஹி அம்மனை வழிபட்டு வர தொழில் மற்றும் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக