அடுத்த 20 நாட்களுக்கு மக்களை வீட்டிற்குள்ளேயே தங்களை பிஸியாக வைத்துக்கொள்ளப் போவது இந்த நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா மற்றும் யூடியூப் போன்ற ஸ்ட்ரீமிங்தளங்கள் தான். அரசின் ஊரடங்கை மதித்து அடுத்த 20 நாட்களுக்கு நான் இதைத் தான் செய்யப்போகிறேன் என்று இப்போதே முடிவு செய்திருக்கும் சிலருக்கு இந்த தகவல் பெரிதும் பயனுள்ளதாய் அமையும்.
100% டேட்டாவும் தீர்ந்துவிடும்
ஸ்ட்ரீமிங் தளங்களை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு நேரம் போவதே தெரியாது, உங்களுக்குத் தெரியாமலேயே, உங்களின் டேட்டாவை முழுவதுமாக உறிஞ்சி உங்கள் இருப்பில் இருக்கும் ஒருநாள் டேட்டாவை வேகமாக தீர்த்துவிடும். நிச்சயம் உங்கள் மெசேஜ் இன்பாக்சில் மாலை 5 மணி அல்லது 6 மணிக்கெல்லாம் 100% டேட்டாவும் தீர்ந்துவிட்டது என்ற நிறுவனத்தின் மெசேஜ் கட்டாயம் உங்கள் நோட்டிபிகேஷன் பாரில் வந்து விழும் என்பதில் சந்தேகமில்லை.
இது தெரிந்தால் உங்கள் டேட்டா பயனை கட்டுப்படுத்தலாம்
இந்த நிலைக்குப் போகாமல், உங்கள் இருப்பு டேட்டாவில் எப்படிச் சரியாக ஸ்ட்ரீமிங் தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உங்களுக்கு எந்தெந்த ஸ்ட்ரீமிங் ஆப், என்னென்ன வீடியோ குவாலிட்டியின் கீழ், எந்த அளவு டேட்டாவை பயன்படுத்தி உங்கள் டேட்டாவை முற்றிலுமாக தீர்த்துவிடுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். இது தெரிந்தால் உங்கள் டேட்டா பயனை முடிந்தவரைக் குறைத்துக்கொள்ளலாம்.
இது எப்படி சாத்தியம்?
இது எப்படி சாத்தியம் என்று தானே யோசிக்கிறீர்கள்? சொல்கிறோம் வாங்க, நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா மற்றும் யூடியூப் போன்ற தளங்கள் என்னென்ன குவாலிட்டியின் கீழ் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறது என்ற தகவலைக் கீழே பகிர்ந்துள்ளோம். இதைத் தெரிந்துகொண்டு நீங்களும் கணக்கிட்டு உங்கள் டேட்டாவை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நெட்பிலிக்ஸ் (Netflix)
- நெட்பிலிக்ஸ் லோ- குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.3 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறது.
- மீடியம் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.7 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது
- ஹை குவாலிட்டியில் எச்டி தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- 4K அல்ட்ரா எச்டி தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 7 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- அமேசான் ப்ரைம் வீடியோஸ் பயன்பாட்டில் டேட்டா சேவர் சேவையுடன் ஒரு மணி நேரத்திற்கு 0.12 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- குட் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.18 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- பெட்டர் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.72 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- பெஸ்ட் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.82 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- மீடியம் குவாலிட்டியில் 360p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 249 எம்பி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- ஹை குவாலிட்டியில் 720p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 639 எம்பி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- ஃபுல் எச்டி குவாலிட்டியில் 1080p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.3 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- லோ குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.17 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- மீடியம் குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 0.51 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- ஹை குவாலிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுகிறது.
- 144p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 30 எம்பி முதல் 90 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- 240p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 180 எம்பி முதல் 250 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- 360p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 300 எம்பி முதல் 450 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- 480p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 480 எம்பி முதல்660 எம்பி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- 720p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.2 ஜிபி முதல் 2.7 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- 1080p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2.5 ஜிபி முதல் 4.1 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- 1440p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2.7 ஜிபி முதல் 08.1 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
- 2160p தரத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5.5 ஜிபி முதல் 23.0 ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக