Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 மார்ச், 2020

தமிழ்நாட்டிலும் கொரோனா? 11 மாத குழந்தை உட்பட நான்கு பேருக்கு சிகிச்சை!

மிழ்நாட்டிலும் கொரோனா அறிகுறிகளுடன் நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சீனாவில் நிலைகொண்டிருந்த கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் 3200 பேருக்கும் மேல் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் உலகின் ஏதோ ஒரு மூலையில் கோர தாண்டவம் ஆடுகிறது என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடமுடியாது என பல தரப்பிலிருந்து எச்சரிக்கைகள் வந்துகொண்டிருந்த நிலையில் இந்தியாவிலேயே 29 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள இத்தாலி நாட்டைச் சேர்ந்த குழுவினரில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களை தவிர, தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பேடிஎம் ஊழியர் ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் 29 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் வழியாக 96 ஆயிரத்து 721 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 1292பேர் வீட்டில் இருந்தபடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தவர்களில் 11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

கோவையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஜப்பான் டோக்கியாவிலிருந்து கோவை திரும்பியுள்ளார். அவருக்கும் தொடர்ந்து காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக