கணவன்
மனைவி எவ்வளவு தான் அன்பாக இருந்தாலும் எதிர்பாராத விதமாக சில சில சண்டைகள், விவாதங்கள்
வரக்கூடும். இருவருக்கு இடையிலும் சண்டை முடிவில் மனைவி பலவற்றை கூறி முடிப்பார். பின்பு
அதனை நினைத்து வருந்துவார். ஒரு சில நேரங்களில் செயல்களை விட வார்த்தைகள் நம்மை ஆழமாக
தாக்கிவிடும் மனதிற்கு அதிக அளவு கஷ்டங்களை ஏற்படுத்திவிடும்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் இவ்வாறு
வீண் வார்த்தைகளை பரிமாறிக் கொண்டிருந்தால் வாழ்க்கையே நரகம் போன்று ஆகிவிடும். இவ்வாறு
சண்டையிடும் கூறும் சில வார்த்தைகளை வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத வார்த்தைகளாக
மாறிவிடும். அதுமட்டுமின்றி திரும்ப திரும்ப சண்டையை தூண்டுவதற்கு வழிகாட்டுதலாக அமைந்துவிடும்.
எனவே சண்டைகள் தவிர்க்க முடியாதவை
என்றாலும், உங்கள் மனைவியிடம் நீங்கள் சொல்வதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.அதிலும் வீட்டில்
கணவன், மனைவிக்கு இடையே சண்டை வரும்போது சில வீடுகளில் பெண்கள் பிடிவாதமாக இருப்பார்கள்.
சிலவற்றில் ஆண்கள் மிகவும் பிடிவாத
குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். யாராவது ஒருவர் தங்களுக்குள் விட்டுக் கொடுத்துப்
போவார்கள். ஆனாலும் கூட பெண்கள் மனதில் சண்டையின்போது பேசிய விஷயங்கள் மனதுக்குள் அப்படியே
படிந்திருக்கும். அடிக்கடி அவர்களுடைய மனதுக்குள் வந்து போகும். இதுபோன்ற விஷயங்களில்
பெண்கள் எப்போதுமே கொஞ்சம் எமோஷனல் தான்.
அதனால் எவ்வளவு சண்டை போட்டாலும்
சில விஷயங்களை மட்டும் பெண்களிடம் சொல்லாதீர்கள். அதை மட்டும் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே
முடியாது. செம காண்டாகிவிடுவார்கள். ஒருபோதும் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள். அப்படி
திருமணமான தம்பதிகள் சண்டையின்போது ஒருவருக்கொருவர் சொல்வதைத் தவிர்க்க வேண்டிய விஷயங்களின்
பட்டியல் இங்கே.
ஏன்
இவ்வளவு சுயநலவாதியாக இருக்குற
ஒரு
சில வீடுகளில் மனைவி நமக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்று எண்ணம்
கணவனுக்குள் ஏற்படும். எப்போதும் மனைவி அவளுக்கான வேலைகளுக்காக மட்டுமே நம்மை
பயன்படுத்துகிறாள் என்று கணவர்கள் நினைப்பதுண்டு. நம் எவ்வாறு வாழ வேண்டும் என்கிற
திட்டப்படி மனைவி நடந்து கொள்ளவில்லை என்றால் அவர்களை குறை கூற வேண்டும் என்ற
எண்ணம் நம் மனதில் உருவாகும். பல சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களில் சுயநலவாதியாக
நடந்து கொள்வாள். ஆனால் இதனை ஏதாவது சண்டையின் போது கூறினால் அது அவர்கள்
உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக செய்த தியாகம் அனைத்தையும் குறை கூறுவது
போன்று ஆக்கிவிடும். நாம் அதனை ஒரு சண்டையில் சொல்லிக் காட்டுவதை விட அமைதியாக
கூப்பிட்டு அமர்ந்து பேச வேண்டும் அவர்களின் தவறுகளை அமைதியாக எடுத்துக் கூறினால்
வாழ்க்கை சிறப்பாக அமையும்.
உன்னை திருமணம்
செய்தது மிகப் பெரிய தவறு
திருமணமான
தம்பதியருக்கு ஏதோ ஒரு தருணத்தில் கல்யாணம் செய்து கொண்டதே தவறு என்ற எண்ணம்
மனதில் தோன்றும். ஏதோ ஒரு பெரிய சண்டையின் போது அதன் உச்சக்கட்டத்தில் உன்னை
கல்யாணம் பண்ணிக்கிட்டதே தவறு என்னும் வார்த்தையை இருவரில் யாரோ ஒருவர்
சொல்லிவிட்டால் அதைப் போன்ற தவறு திருமண வாழ்வில் வேறொன்றும் இல்லை. இந்த வார்த்தை
உங்கள் துணையை வாழ்நாள் முழுவதும் கஷ்டபடுத்தி கொண்டே இருக்கும். ஆகையால் இந்த
மாதிரியான வார்த்தைகளை எப்போதும் கூறி விடாதீர்கள். எதை வேண்டுமானாலும் பெண்களால்
தாங்கிக் கொள்ள இயலும். இதுபோன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள இயலாது. இதற்காக எப்போது
வேண்டுமானாலும் உங்களைப் பழிவாங்கலாம். சாப்பாடு விஷயத்திலோ அல்லது மற்ற சில
ரொமான்ஸ் சந்தர்ப்பங்களிலோ உங்களுக்குத் தேவையானது தேவையான பொழுது கிடைக்காமல்
போகலாம்.
உன்னை விட என் தொழில்
தான் எனக்கு முக்கியம்
காதல்,நம்பிக்கை,மரியாதை,நன்பகத்தன்மை
இவை அனைத்தும் வாழ்கையின் தூண்களை போன்றது.இதனில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும்
வாழ்வே நிலைகுலைந்து விடும்.மரியாதை என்பது மிகவும் முக்கியமான ஒன்று அதனை
ஒருவருக்கொருவர் கண்டிப்பாக தரவேண்டும்.நீ பெரிது நான் பெரிது என்னும் பாகுபாடு
இருக்கக் கூடாது.நாம் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் எவ்வளவு அதிகமாக
சம்பாதித்தாலும் தொழில் வேறு குடும்பம் வேறு என்ற எண்ண வேண்டும்.இரண்டையும் ஒன்று
படுத்தி பார்க்க வேண்டாம்.எந்த சூழலிலும் என் பதவி தான் பெரிது என் சம்பாத்தியம்
பண்ணுவதால் தான் இந்த குடும்பம் நடக்கிறது என்ற வார்த்தையை எப்போதும் உபயோகிக்க
கூடாது.இப்பிடிபட்ட வார்த்தைகள் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
நான் உங்கள் பெற்றோரை
வெறுக்கிறேன்
திருமணத்திற்கு
பிறகு பெண்கள் புது உறவை புது வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது சற்றே கடினமான
விஷயம்.ஆனால் பெண்ணாக பிறந்த அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது நம் கடமை.மாமனார்
மாமியார் சொல்லும் விஷயங்களை நாம் பக்கவத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.என்ன
தான் சண்டை போட்டுக் கொண்டாலும் உங்கள் அப்பா அம்மாவை எனக்கு பிடிக்கவில்லை நான்
அவர்களை வெறுக்கிறேன் என்று ஒருபோதும் கணவரிடம் கூறக் கூடாது.நமக்கு மாமனார்
மாமியார் என்றாலும் நம் கணவருக்கு அவர்கள் பெற்றோர் அல்லவா அவர்கள் மீது பாசம்
சற்று அதிகமாகவே இருக்கும்.ஆகையால் சண்டையின் போது இதுபோன்ற வார்த்தைகளை
தவிர்த்துக் கொள்வது வாழ்க்கைக்கு நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக