டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றியுள்ளனர். சீனா டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் முதல் முறையாகச் சரிவைச் சந்தித்துச் சீன டெலிகாம் சந்தையைப் பயமுறுத்தியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
சீனாவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாகத் திகழும் சைனா மொபைல் லிமிடெட் நிறுவனத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத காலத்தில் மட்டும் சுமார் 80 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
சைனா டெலிகாம் கார்ப் என்னும் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 56 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதேபோல் சீனா யூனிகார்ன் ஹாங்காங் லிமிடெட் ஜனவரி மாதத்தில் 12 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
டெலிகாம் சந்தை
கொரோனாவின் காரணமாகச் சீன டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்கள் குறைந்தது மட்டும் அல்லாமல் வருவாயும் அதிகளவில் குறைந்துள்ளது. ஆனால் அடுத்தச் சில மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் குறைந்தது 3 மாத காலம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
என்ன காரணம்..?
பொதுவாகச் சீனாவில் வெளியூர்களில் பணியாற்றும் மக்கள், சொந்த ஊர் பகுதியை சேர்ந்த ஒரு எண்ணையும், வேலைக்குச் செல்லும் பகுதியைச் சேர்ந்த ஒரு எண் என 2 இணைப்பை வைத்திருப்பார்கள்.
சீனா புத்தாண்டின் போது தான் கொரோனா தனது கொடூரத்தை ஆரம்பித்தது. இதே நேரத்தில் தான் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு நீண்ட விடுமுறையின் காரணமாகச் சென்றனர். அப்போது சீன அரசு மக்களை வீட்டிலேயே தங்கும் படி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மக்கள் வேலைக்குச் செல்லும் பகுதியைச் சேர்ந்த எண்ணை ரத்து செய்துவிட்டனர்.
இதன் காரணமாகத் தான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.
பங்குச்சந்தை
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்ததன் எதிரொலியாகச் சீன டெலிகாம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சீன பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக