ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் மத்தியப் பிரதேச மாநில அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அரசியல்
குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியில் பிரதமர்
மோடியை ஜோதிராதித்ய சிந்தியா இன்று காலை சந்தித்தார். இதுபற்றி தகவலறிந்த காங்கிரஸ்
தலைமை அதிர்ச்சி அடைந்தது. அடுத்தக்கட்ட நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வந்தது.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா
கடிதத்தை கட்சி தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை நீக்கி காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை நீக்கி காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
— ANI (@ANI) 1583824974000
அதன்படியே 6 அமைச்சர்கள் உட்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை மத்தியப் பிரதேச ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். 230 இடங்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் ஏற்கனவே இரண்டு இடங்கள் காலியாக இருக்கின்றன.
எனவே 228 உறுப்பினர்கள் பலம் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏக்களும், பாஜகவிற்கு 107 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 4 பேர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேர், சமாஜ்வாதி கட்சி ஒரு எம்.எல்.ஏ ஆகியோர் ஆதரவுடன் 121 என்ற பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 102ஆக குறைகிறது. அதேசமயம் சட்டமன்றத்தில் இருக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 209ஆக குறையும்.
— ANI (@ANI) 1583826797000
இதில் பெரும்பான்மைக்கு 105 எம்.எல்.ஏக்கள் தேவை. எனவே பாஜகவிற்கு அதிக உறுப்பினர்கள் இருப்பதால் அக்கட்சி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
அம்மாநிலத்தில் இன்று காலை அடுத்தடுத்த அரசியல் அதிரடிகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த சூழலில் அடுத்தக்கட்ட பரபரப்பு என்னவாக இருக்கும் என்று பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக