Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 மார்ச், 2020

உலக அளவில் ஆயுத இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடம்...சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்...

Image result for உலக அளவில் ஆயுத இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடம்...சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்...



சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி ஆயுத இறக்குமதியாளர்கள் பட்டியலில் 5 ஆண்டுகளாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
ஏனெனில் சமீப காலங்களில் போர்ஜெட், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகள் ஆகியவற்றைப் பெற்று தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்த முன்வந்ததாக கூறப்படுகிறது.
 2015 - 2019 வரையிலான ஆண்டுகளில் சவுதியை தொடர்ந்து இந்தியா 2வது மிகப்பெரிய ஆயுதங்கள் இறக்குமதியாளராக உள்ளது. இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான் 11வது இடத்தில் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பெரிய ஆயுதங்கள் இறக்குமதியில் சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
இது அனைத்து ஆயுத இறக்குமதியில் 36 சதவீதமாக உள்ளது. மேலும் உள்நாட்டு ஆயுத உற்பத்தியின் அதிகரிப்பு காரணமாக இந்தியா கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. அதே நிலை தான்  இன்றும் தொடர்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக